சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு சிக்கல்: எச்சரிக்கை தேவை

Sun Transit 2022: ஜூன் 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 5 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 7, 2022, 01:18 PM IST
  • மீன ராசியில் சூரியனின் ராசி மாற்றத்தால் கலவையான பலன் காணப்படும்.
  • தொழிலில் ஈடுபடுபட்டுள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு சிக்கல்: எச்சரிக்கை தேவை title=

சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் அதன் நிலையை மாற்றும் போது, ​​அதன் தாக்கம் 12 ராசிகளின் வாழ்க்கையில் காணப்படுகிறது. இந்த விளைவு சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு பாதகமாகவும் இருக்கும். 

ஜூன் 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசியை விட்டு மிதுன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். இந்த ராசியில் சூரியன் மாறுவதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதே சமயம் 5 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சூரியனின் சஞ்சாரத்தின் அசுப பலன்கள் எந்தெந்த ராசிகளில் தெரியும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

சூரியனின் சஞ்சாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்
 
மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் மாற்றத்தால் கலவையான பலன்களைப் பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பெரிய முதலீடு செய்ய நினைத்தால், கண்டிப்பாக பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் அதை செய்யவும். 

குடும்ப சூழ்நிலை இயல்பாக, நிம்மதியாக இருக்கும். இந்த காலத்தில், சகோதர சகோதரிகளுக்குள் தகராறு ஏற்படலாம். கோபத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். மேலும், இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்கவோ, கடன் வாங்கவோ வேண்டாம். இது பிரச்சனைகளை எற்படுத்தும். 
  
கடக ராசி: 

கடக ராசிக்காரர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சில வேலைகளில் தோல்வி ஏற்படும். இதன் காரணமாக நீங்கள் வருத்தமும் கவலையும் அடையலாம். பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இந்த காலத்தில் கொடுக்கும் கடனால் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். 

மேலும் படிக்க | விரைவில் சனி தசை; சனிபகவானின் பிடியில் இந்த 2 ராசியினர் சிக்குவார்கள் 

போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும், உழைத்தால், கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.  இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையிலும் ஏற்ற தாழ்வுகளும் மன வேறுபாடுகளும் ஏற்படலாம். எனவே ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

ரிஷபம்: 

தற்போது சூரியன் ரிஷப ராசியிலிருந்து நகர்ந்து மிதுன ராசியில் நுழையவுள்ளார். அதன் தாக்கம் ரிஷப ராசிக்காரர்களிடமும் காணப்படும். அவர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். குழந்தைகள் மூலம் மன அழுத்தம் ஏற்படலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் கடினமாக ஒருவர் உழைத்தாலும் பலன் கிடைக்காது. அதிகப்படியான பணச் செலவு காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடக்கூடும்.

மீனம்:

மீன ராசியில் சூரியனின் ராசி மாற்றத்தால் கலவையான பலன் காணப்படும். நீங்கள் பயணிக்கும் எண்ணத்தில் இருந்தால், அந்த பயணத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்துங்கள். ஜாக்கிரதை உணர்வு மிக அவசியம். தொழிலில் ஈடுபடுபட்டுள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

துலாம்: 

இந்த ராசிக்காரர்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த நேரமும் மாணவர்களுக்கு தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும். தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் பணத்தை இழக்க நேரிடும். 

இந்த நேரத்தில் அதிகப்படியான கடவுள் வழிபாடு நன்மை பயக்கும். வியாபாரத்தை மாற்றும் முன் பல முறை யோசித்து பின்னர் முடிவு செய்யுங்கள். புதிய தொழில்களின் உருவாக்கத்திலும், தொழிலில் செய்யும்  மாற்றங்களிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்டோபர் 23 வரை சனி வக்ர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News