சூரிய கிரகணம் 2022: அக்டோபர் 25 அன்று சூரிய கிரகணம் நிகழப் போகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் துலாம் ராசியில் நிகழவுள்ளது. இம்முறை சூரிய கிரகண நேரத்தில் சூரியனுடன் சந்திரன், சுக்கிரன், கேது ஆகியோரும் துலாம் ராசியில் இருப்பதால் துலாம் ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாக உள்ளது. இதனுடன், ராகு இந்த கிரகங்களை நேரடி பார்வையை செலுத்துவார். சனியின் பார்வையும் விழும். இதன் காரணமாக ஏற்படும் சதுர்கிரஹி யோகம், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், ஆனால் 3 ராசிகளுக்கு, இந்த நேரம் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும்.
சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
மிதுனம்:
சூரிய கிரகணத்தால் உருவாகும் சதுர்கிரஹி யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்கிறது. அவர்களின் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வரலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்!
துலாம்:
துலாம் ராசியில் சூரிய கிரகணம் நிகழவிருப்பதாலும், இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகி வருவதாலும் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விபத்து நடக்கலாம். காயம் ஏற்படலாம். பதற்றம் இருக்கலாம். நம்பிக்கை குறையும். ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். வேலையில் எச்சரிக்கையாக இருங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கும் சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வேலை மற்றும் வியாபாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். முதலீடு செய்யாதீர்கள். வேலைகளை மாற்ற வேண்டாம். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இந்த நேரம் சரியாக இல்லை என்றே சொல்லலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ