சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை, எச்சரிக்கை தேவை

Sun Transit: ஜூலை மாதம் சூரியனின் பெயர்ச்சியால் வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகள் ஏற்படும். குறிப்பாக இந்த ராசியில் வாழ்க்கை மாறும் அளவு தாக்கங்கள் ஏற்படலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 14, 2022, 12:51 PM IST
  • மீன ராசிக்காரர்கள் தங்களின் மன சக்தியை அதிகரிக்க தியானத்தின் உதவியை நாட வேண்டும்.
  • அனைத்து பணிகளையும் கவனமாக செய்யுங்கள்.
  • பயணம் செல்வதற்கு முன், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
சூரியன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு நேரம் சரியில்லை, எச்சரிக்கை தேவை title=

மீன ராசியில் சூரிய கோச்சார பலன்கள்: ஜூலை மாதம் கிரகங்களின் ராசி மாற்றத்தின் அடிப்படையில் விசேஷமாக கருதப்படுகின்றது. இந்த வாரத்தில் சூரிய பகவான் கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 16 இரவு, சூரியன் கடக ராசிக்குள் நுழைகிறார். கடகத்தின் அதிபதி சந்திரன். சூரியன் சந்திரனின் வீட்டிற்குள் நுழைவது வெவ்வேறு ராசிகளில் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. சூரியனின் மாற்றத்தால் மீன ராசியில் ஏற்படவுள்ள பலன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

அனைத்து பணிகளையும் கவனமாக செய்யுங்கள்

கடகத்தில் சூரியன் இருக்கும் காலத்தில் மீன ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையையும் கவனமாக யோசித்து செய்ய வேண்டும். நீங்கள் செய்ய நினைத்த பணியை செய்து முடிக்க அதிக நேரம் ஆனாலும், அதை செய்து முடித்துவிடுங்கள். இதற்கிடையில் மனதளவில் குழப்ப நிலை வரலாம். ஆனால் உறுதியான முடிவுகளை எடுத்தால், குழப்பமடைய வேண்டியதில்லை. 

தியானத்தின் உதவியை நாடுங்கள்

மீன ராசிக்காரர்கள் தங்களின் மன சக்தியை அதிகரிக்க தியானத்தின் உதவியை நாட வேண்டும். தியானம் செய்வதன் மூலம் மனக் குழப்பம் மற்றும் பயம் போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். உடலில் பலவீனம் ஏற்படலாம். இதை சரி செய்ய, தியானத்துடன் சிறிது நேரம் யோகா பிராணயாமம் ஆகியவற்றை செய்வதையும் வழக்கமாகக் கொள்ளுங்கள். இளைஞர்கள் வேண்டுமானால் ஜிம்மில் சேரலாம். ஆனால் சேர்ந்தவுடன் தினமும் செல்ல வேண்டும். எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்டுவது நல்லதல்ல. அப்படி செய்தால் எந்த பலனும் கிடைக்காது. 

மேலும் படிக்க | மன்னிக்க மனமில்லாதவர்களின் மன நிம்மதியை சொல்லும் ஜாதகம்: சனியின் தாக்கம் 

சூரிய சஞ்சாரத்தால் பண இழப்பு ஏற்படலாம்

தொழிலதிபர்கள் மிகக் கவனமாகத் திட்டமிட்டு வியாபாரம் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் நஷ்டம் குறையும். இல்லையெனில், கிரகங்களின் நிலையால் இந்த காலகட்டத்தில் பணத்தை இழக்க நேரிடும். பண இழப்பை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். வீட்டில் தேவைக்கு ஏற்ப மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை செலவழிக்க வேண்டும். சிறு விஷயங்களிலும் சிக்கனம் தேவை. ஏனெனில் இந்த காலத்தில் பல வழிகளில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளவும்

உங்களுடன் சேர்ந்து, உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். சிறு பிரச்னை என்றாலும் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக தெவையான சிகிச்சை அளிக்க வேண்டும். சில சமயங்களில் சிறிய நோய்கள் பிற்காலத்தில் பெரிதாகிவிடுவதால், நோய் வந்தவுடன் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

விபத்துகளுக்கான ஆபத்து உள்ளது

பயணம் செல்வதற்கு முன், முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். சொந்த வாகனத்தில் பயணம் செய்ய விரும்பினால், உங்கள் வாகனத்தை முன்கூட்டியே சர்வீஸ் செய்து கொள்ளவும். அதே போல் ஸ்டெப்னி மற்றும் டூல் பாக்ஸை சரிபார்க்கவும். பயணத்தில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான போது மட்டும் பயணம் செய்யுங்கள். இல்லையெனில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. 

எப்போதும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது நல்லது. தாமதமாக கூட செல்லலாம், ஆனால் அவசரப்பட்டு விபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பிற்குள் வாகனத்தை இயக்க முயற்சிக்கவும். ரயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தால், பொறுமை கடைபிடித்து, சிக்னல் வந்தவுடன் கடக்கவும். எந்த நேரத்திலும் அவசரம் வேண்டாம். 

சச்சரவுகளைத் தவிர்க்கவும்

அரசு அதிகாரிகளிடம் மிகவும் பணிவாகப் பேசுங்கள். திடீரென்று ஏதேனும் ஒரு விஷயத்தின் மீது விவாதம் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி, துன்பம் இரண்டும் வருவதால் எந்த விதமான தனிமையோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ உங்களுக்குள் வர விடாதீர்கள். துக்கத்திற்குப் பிறகு மகிழ்ச்சி வரும்போது நன்றாக இருக்கும், நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Sun Budh Transit: சூரியனும் புதனும் கடக ராசியில்: கும்பத்திற்கு அதிர்ஷ்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News