சனியின் 3 ஆபத்தான யோகங்கள்... இந்த ராசிகளின் வாழ்வில் புயல் வீசும்

Ashubh Yog In Kundali: சில யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் உருவாகி, அவரை பாடாய் படுத்தும். ஜாதகத்தில் சனியுடன் சில கிரகங்களின் சேர்க்கை ஒரு நபரின் வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இந்த ஆபத்தான யோகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 6, 2023, 08:43 AM IST
  • நபரின் வாக்கையில் பேரழிவை ஏற்படும்.
  • ஒவ்வொரு அடியிலும் தோல்வியையே சந்திக்க நேரிடும்.
  • திடீரென பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சனியின் 3 ஆபத்தான யோகங்கள்... இந்த ராசிகளின் வாழ்வில் புயல் வீசும் title=

சனி அசுப யோகம்: ஜோதிடத்தில், சனி ஒரு கொடூரமான மற்றும் நீதியான கடவுளாகக் கருதப்படுகிறார். சனி ஒருவரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருவதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு சனியின் அருள் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித குறையும், சங்கடமும் ஏற்படாது. மறுபுறம், சனியின் தீய பார்வை ஒரு நபரை முற்றிலுமாக அழித்துவிடும் என்பது ஜோதிட ஐதீகம். ஜோதிடத்தில், சனியின் சில தசைக்கள் மற்றும் யோகங்கள் மிகவும் ஆபத்தானதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதிடத்தில் இதுபோன்ற மூன்று யோகங்கள் உள்ளன, அவை சனியுடன் தொடர்புடையது. இந்த ஆபத்தான யோகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் ஏற்பட்டால், அது அந்த நபரின் வாக்கையில் பேரழிவை ஏற்படும். இந்த யோகங்களால் வாழ்க்கையில் ஒவ்வொரு அடியிலும் ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அடியிலும் தோல்வியையே சந்திக்க நேரிடும். எனவே அந்த மூன்று யோகங்கள் என்ன என்பதையும் அவை எப்படிப் பட்ட பலன் தரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

சனி மற்றும் ராகுவின் யோகம்
ஜோதிட சாஸ்த்திரத்தில், சனி மற்றும் ராகு இரண்டும் பயங்கரமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் அந்த நபரின் குடும்பத்தில் பொருளாதார மட்டத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இந்த யோகத்தால், ரகசிய யோகம் ஒருவரைப் பிடிக்கிறது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த நபர் திடீரென பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்த யோகத்தால் ஒருவரது வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கச் செய்யும்.

பரிகாரம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த யோகத்தின் பின்விளைவுகளைத் தவிர்க்க, சனிக்கிழமை மாலை ஆலமரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். மேலும், கடுகு எண்ணெய் தானம் செய்யவும்.

சனி மற்றும் சந்திரன் யோகம்
ஒருவரின் ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தால் போதைக்கு அடிமையாகி விடுவார் என்பது ஐதீகம். தவறான பாதையில் செல்ல ஆரம்பிப்பார்கள். அதுமட்டுமின்றி, சனியின் நிலை மோசமாக இருந்தால், அந்த நபர் குற்றங்களைச் செய்யத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

பரிகாரம்
திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும். கரும்புச் சாறுடன் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவும். சனிக்கிழமை மருந்துகளை தானம் செய்யுங்கள். விரதத்தின் போது தண்ணீர் மற்றும் பால் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

சூரியன் மற்றும் சனியின் யோகம்
இந்த யோகத்தால் வேலையில் தோல்வியை சந்திக்க வேண்டி வரும். எத்தனை முயற்சிகள் மற்றும் கடின உழைப்பு செய்தாலும், இலக்கை அடைய முடியாமால் போகும். தந்தை, மகன் உறவில் விரிசல்கள் ஏற்பட்டும். மேலும், எலும்பு தொடர்பான நோயால் அவதிபடக்கூடலாம்.

பரிகாரம்
இந்த மோசமான யோகத்தில் இருந்து விடுப்பட, சூரிய உதிக்கும் நேரத்தில் தண்ணீர் ஊற்றவும். மேலும், மாலையில் ஆலமரத்திற்கு தண்ணீர் ஊற்றி வணங்கவும். செப்புப் பாத்திரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் "ஓம் சூர்யபுத்ராய நம:" என்ற சூரிய மந்திரத்தை உச்சரிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இவங்களையெல்லாம் சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது..! ஆனால் பரிகாரம் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News