15 நாட்களுக்குள் இரு கிரகணங்கள்! ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்!

2024 Surya Chandra Grahans : இன்னும் சில தினங்களில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 5, 2024, 07:28 AM IST
  • மார்ச் மாதத்தில் சூரிய கிரகணம்
  • ஏப்ரலில் சூரிய கிரகணம்
  • 15 நாட்களுக்குள் 2 கிரகணங்கள் ஏற்படுத்தும் தாக்கம்
15 நாட்களுக்குள் இரு கிரகணங்கள்! ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்! title=

இந்து மதத்தில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு. இயற்கையை தெய்வங்களாக பார்க்கும் நம் நாட்டில் நிலவும் சூரியனும், சூரிய தேவன், சந்திரன் என கடவுள் அந்தஸ்து பெற்றுள்ளன. ஜோதிட சாஸ்திரப்படி, சந்திரன் மற்றும் சூரியன் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுவது, அனைவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் 2024ம் ஆண்டு மொத்தம் இரண்டு சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் என மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்பட உள்ளது.​ முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி, திங்கட்கிழமையன்று ஏற்படுகிற்து. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்றாலும், அது ஜோதிட ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்தும். ஆனால், மகா சிவராத்திரி வரும் இந்த மாசி மாதத்தில் சிவனை கும்பிட்டால் நவகிரக நாயகர் அருள் பாலிப்பார் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை ஆகும்.

அதே போல இந்த ஆண்டில் ஏப்ரல் 8ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த கிரகணம் இந்திய நேரப்படி மாலை 4.38 மணிக்கு தொடங்கி இரவு 8.52 மணிக்கு முடிவடைவதால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது.

சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் 15 நாட்களுக்குள் நிகழ்வதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும் என்றால், சிலருக்கு மந்தமான பலன்கள் இருக்கும், எஞ்சியவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். 

15 நாட்களுக்கும் நடைபெறும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தால் 4 ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கும். அந்த ராசிகளில் உங்களுடையதும் இருக்கிறதா? தெரிந்துக் கொள்ளுங்கள்...

மேலும் படிக்க | மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!

மேஷ ராசி 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் சுப பலன்களைத் தரும். இந்த கிரகணம் இவர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் தரும். லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் சித்திக்கும்
 
மிதுன ராசி

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் சூரிய கிரகணமும் மிதுன ராசியினருக்கு சிறப்பாக அமையும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்கும், வாராக்கடன்கள் வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
 
சிம்ம ராசி

2024 ஆம் ஆண்டின் முதல் இரண்டு கிரகணங்களும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையே அளிக்கும். நீண்டகாலமாக தொடர்ந்து வந்த பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். இனி வாழ்க்கையில் நல்ல நாட்கள் வருவதற்கான அறிகுறிகள் தெரியும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றன.
 
தனுசு ராசி

15 நாட்களுக்குள் நிகழும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். புதிய வேலையைத் தொடங்க நல்ல நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்.

(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது).

மேலும் படிக்க | சோபகிருது ஆண்டு மாசி 22ம் நாள் ராசிபலன்! அருள் பொழியும் மாசி செவ்வாய் ராசிபலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News