உங்கள் பணிவு தான் உங்களை தலைவாவாக்கியுள்ளது -சச்சின்!

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   

Last Updated : Dec 12, 2019, 04:34 PM IST
உங்கள் பணிவு தான் உங்களை தலைவாவாக்கியுள்ளது -சச்சின்! title=

சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   

ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும்  தங்களது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி பதிவிட்டிருப்பதாவது., "திரை பணியில் உங்க் பாணியும், நிஜ வாழ்வில் உங்கள் பணிவும் உங்களை தலைவாவாக்கியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார். மேலும் "பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir" என தமிழிலும் தனது வாழ்த்தினை பகிர்ந்துள்ளார்.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்த்துக்களையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் பகிர்ந்துள்ளனர். 

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் குறைந்த விலையில் உணவு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகரும் சித்த மருத்துவருமான வீரபாபு இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். உணவகத்தை சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இங்கு அளவு சாப்பாடு10 ரூபாய்க்கும் அளவில்லா சாப்பாடு 30 ரூபாக்கும் வழக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Trending News