ஏய் தாய்க்கிழவி! இப்டி கவுந்திட்டியே’ குலுங்கிச் சிரிக்கும் சிறுவனின் வைரல் வீடியோ

மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க செல்லும் தாய் தண்ணீருக்குள் கவிழ்ந்து விழுந்த வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 3, 2022, 03:09 PM IST
  • நீச்சல் குளத்தில் தவறி விழும் அம்மா
  • வயிறுவலிக்க சிரிக்கும் சிறுவன்
  • இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ
ஏய் தாய்க்கிழவி! இப்டி கவுந்திட்டியே’ குலுங்கிச் சிரிக்கும் சிறுவனின் வைரல் வீடியோ title=

குழந்தைகள் மட்டும் இருந்துவிட்டால் வீட்டில் அன்றாடம் ஆயிரம் காமெடிகள் நடக்கும். பிஸிஷெட்யூல்களில் இருப்பவர்கள் கூட வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் சேட்டைகளை கவனிக்கும்போது பிரச்சனைகளை மறந்து வயிறு குலுங்க சிரித்துவிடுவார்கள். அப்படியான சிரிப்பு மருந்து இன்று ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது. அதுஒருபுறமிக்க, குழந்தைகள் செய்யும் சேட்டைகளை கவனிக்கும் பெற்றோர்கள் ஒரு சில நேரத்தில் அவர்களும் குழந்தைகளாகவே மாறிவிடுவார்கள். அப்படி மாறுவது நம்மில் பலருக்கும் பிடிக்கும். குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறி விளையாடும்போது தான் அதில் கிடைக்கும் சந்தோஷம் இன்னும் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சீறும் சிறுத்தையின் அட்டகாசத்தை அடக்கும் அதிகாரிகள் வீடியோ வைரல்

குறிப்பாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுக்கும்போது கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் குழந்தைகள் ஆரம்பக்கட்டத்தில் ஜாலியாக செய்யும் செயல் சிரிப்பை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் கற்றுக் கொடுப்பவர்களாகிய பெற்றோர் சிறிய தவறு செய்தாலும் குழந்தைகள் பங்கம் செய்துவிடுவார்கள். அப்படியான ஒரு காமெடியான சம்பவம் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் சிறுவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க தாய் அழைத்துச் செல்கிறார். அப்போது, நீச்சல் குளத்தில் மீது நின்று எப்படி குதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்களை கூறுகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ViralHog (@viralhog)

குண்டாக இருக்கும் தாய், சிறுவனுக்கு சொல்லிக் கொடுக்கும்போது அங்கும் இங்கும் நகர்கிறார். அப்போது அவரால் சரியாக பேலன்ஸ் செய்ய முடியவில்லை. உடனே, கால்தடுமாறி படிக்கட்டுகளில் வைத்து பேலன்ஸ் செய்ய முயற்சி செய்தபோதும் முடியாமல் கடைசியில் நீச்சல் குளத்திற்கு விழுகிறார். இதனைப் பார்த்து சிறுவனும், வீடியோ எடுக்கும் தந்தையும் வயிறு குலங்க சிரிக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | தகிக்க வைக்கும் நெருப்பாற்றின் வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News