Viral Video: எஸ்கலேட்டரில் ஏறி துள்ளி குதித்த மானுக்கு ஏற்பட்ட சோகம்

ஒரு மானின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. ஒரு மருத்துவமனையில் வைக்கப்படுள்ள சிசிடிவி கேமராவில் ஒரு வினோத நிகழ்வு பதிவாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 06:00 PM IST
Viral Video: எஸ்கலேட்டரில் ஏறி துள்ளி குதித்த மானுக்கு ஏற்பட்ட சோகம் title=

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

 சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் (Animal Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மானின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. ஒரு மருத்துவமனையில் வைக்கப்படுள்ள சிசிடிவி கேமராவில் ஒரு வினோத நிகழ்வு பதிவாகியுள்ளது.

காயமடைந்த மான் (Deer) ஒன்று மருத்துவமனைக்குள் நுழைந்து எஸ்கலேட்டரில் ஏறிச் செல்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோவை பார்த்தால், காயம் அடைந்தால் எங்கு செல்ல வேண்டும் என மானுக்கு ஏற்கனவே தெரிந்திருப்பது போல இருக்கிறது.

ALSO READ: இப்படி சகட்டுமேனிக்கு முட்டையிட்டா என்ன அர்த்தம்? வைரலாகும் Mosquito வீடியோ 

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. வழுக்கும் வகையில் உள்ள ஃப்ளோரில் தடுமாறி இரண்டாவது மாடிக்கு எஸ்கலேட்டரில் மான் ஏறிச் செல்கிறது. இதை அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் படம் பிடித்துள்ளன.

இந்த வினோதமான காட்சியைப் பார்த்து அங்கிருக்கும் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

மான் இரண்டாவது மாடியை அடைந்த பிறகு, அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் அதை ஒரு வழியாக பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள். அந்த மான் பின்னர் மருத்துவமனை படுக்கையில் வைக்கப்பட்டு, லூசியானா வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறையிலிருந்து வந்த ஒரு டிரக்கில் கொண்டு செல்லப்படுகின்றது.

அந்த அமைப்பில் அந்த மானுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது காயத்தை சரி செய்து கொள்ள வேகமாக மருத்துவமனைக்கு ஓடி வந்து எஸ்கலேட்டரில் அசால்டாய் பயணித்த இந்த மான் இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவும் வைரல் (Viral Video) ஆகி வருகின்றது.

ALSO READ: Viral Video: கிஸ் பண்ண போய் மிஸ் ஆன நட்பு: குரங்கு, கிளியின் கியூட் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News