கடல் ஒரு மர்மமான இடமாக உள்ளது. ஏனெனில் கடலின் பெரும்பகுதி இன்னும் நமக்கு புரியாத புதிராக உள்ளது. ஆழமான மிகவும் பரந்த கடலை அளப்பதும் அறிந்து கொள்வதும் மனித சக்திக்கு அப்பாற்றபட்ட விஷயமாகத் தான் இன்னும் இருக்கிறது. வினோதமான உயிரினங்களைப் பற்றி விஞ்ஞானிகள் தினம் தினம் கண்டுபிடித்தா வண்ணம் இருக்கிறார்கள். இப்போது, கடல் வெள்ளரி அல்லது கடல் அட்டை என்று அழைக்கப்படும் அத்தகைய வித்தியாசமான தோற்றமுடைய ஆழ்கடல் உயிரினத்தின் வீடியோ ஆன்லைனில் வெளிவந்து இணையத்தை திகைக்க வைத்துள்ளது.
இந்திய வன துறை (IFS) அதிகாரி சுசந்த நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், சிறிய வீடியோவில் உயிரினம் முழுமையாக விரிந்து கைகளை விரிப்பதைக் காட்டுகிறது. சில வினாடிகளுக்குப் பிறகு, கடல் வெள்ளரி அதன் பல கைகளை பயன்படுத்தி சாப்பிடுவதைக் காட்டுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவைக் கீழே காணலாம்:
Sea cucumber eating, using its feet looking like tentacles surrounding its mouth. pic.twitter.com/3jMyVGGyBt
— Susanta Nanda IFS (@susantananda3) August 2, 2022
திரு. நந்தா அந்த வீடியோவிற்கு, "கடல் அட்டை தனது கால்களை விரித்து உணவு உண்ணும் காட்சி" என்று தலைப்பிட்டுள்ளார்.
பகிரப்பட்டதிலிருந்து, இது 16,000 பார்வைகளையும் நூற்றுக்கணக்கான விருப்பங்களையும் பெற்றுள்ளது. ஒரு பயனர் எழுதினார், " அரிய காட்சிகள் காண விண்வெளிக்குச் செல்ல வேண்டியதில்லை, நமது கடல்களிலும் அவற்றின் ஆழமான அகழிகளிலும் போதுமான விசித்திரமான விஷயங்கள் உள்ளன." என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்
கடல் அட்டை அல்லது கடல் வெள்ளரிகள் எக்கினோடெர்ம்ஸ் எனப்படும் ஒரு பெரிய விலங்கு குழுவின் ஒரு பகுதியாகும், இதில் நட்சத்திர மீன்கள் மற்றும் கடல் அர்ச்சின்கள் ஆகியவை உள்ளன. அவை கடல் அடிவாரத்தில் வாழ்கின்றன மற்றும் அவை பொதுவாக பாசிகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கழிவு துகள்களை உண்கின்றன. அதன் வாயைச் சுற்றியுள்ள குழாய் போன்ற கால்களால் சாப்பிடுகின்றன.
மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ