அதிர்ச்சி! மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை!

ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு அரசு மருத்துவமனையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

Last Updated : Sep 25, 2018, 10:03 AM IST
அதிர்ச்சி! மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை! title=

ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் ஒரு அரசு மருத்துவமனையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்தட்டுப்பாடு காரணத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராரன் தாலுகா மருத்துவமனையில் மின்சாரம் இல்லாத நிலையிலும் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சாரம் இல்லாத நேரத்தில் மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 

 

 

இது குறித்து அம்மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், தினம் 180 முதல் 200 வரை நோயாளிகள் மருத்துவமனை வருகின்றனர். கடுமையான மின்பற்றாக்குறை இந்த உள்ளது. மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளிக்கிறேன் என்றார்.

 

 

Trending News