பொதுவாக வீட்டு வன்முறையை பற்றி பேசும் போது, கணவன் மனைவியை அடிக்கும் சம்பவங்களைத் தாம் நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், இப்போது மனைவி கணவனை மிக கொடூரமாக அடிக்கும் வீடியோ, பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் தனது கணவரை கிரிக்கெட் பேட்டால் அடிக்கும் பகீர் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் புகார் அளித்த பள்ளி முதல்வர் ஒருவர், தனது மனைவியின் உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர், தனது மனைவியின் சித்திரவதையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போலீஸாரிடம் அளித்த புகாரில், தனது மனைவி தன்னை கரண்டி, கிரிக்கெட் பேட் என கையில் கிடைப்பதை வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதாகக் கூறினார். தன்னை மனைவி துன்புறுத்துவதை கூறினால், நம்ப மாட்டார்ன்கள் என்பதால், ஆதாரங்களை சேகரிக்க வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார். சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி ஒன்றில், அந்த பெண், அவர்களின் மகனின் முன்னாலேலே அந்த குறிப்பிட்ட நபரை கிரிக்கெட் மட்டையால் அடிப்பதைக் காணலாம்.
மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்
வீடியோவை இங்கே காணலாம்:
பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகிய அவர், சம்பவத்தின் காட்சிகளை சமர்பித்துள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் வசிக்கும் சுமன் என்பவரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்த பள்ளி முதல்வர் அஜித் சிங் யாதவ், பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிம்மதியாக இருந்த அவர்களது வாழ்க்கையில் சிறிது காலம் கழித்து புயல் வீசத் தொடங்கியது. அடிக்கடி நடக்கும் சண்டையில், மனைவி நடத்திய மூர்த்தனமான தாக்குதலால், அஜித் சிங் பல காயங்களுக்கு உள்ளாகி, அதனை குணப்படுத்த மருத்துவ உதவியை நாடியுள்ளார்.
தனது துன்பமான வாழ்க்கையை விவரித்த சிங் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு, வன்முறையை சகித்துக் கொண்டதாகவும் கூறுகிறார். ஆனால் இப்போது என் மனைவி அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதால் நான் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன். தனது மைத்துனர், தனது மனைவியை வன்முறைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறியதில், ‘நான் சுமன் ஒரு போது அடித்ததில்லை, சட்டத்தை கையில் எடுத்ததுமில்லை. நான் ஒரு ஆசிரியர். ஒரு பெண்னை அடிப்பதும், சட்டத்தை கையில் எடுப்பதும், இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது’ என்றார்.
மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR