மழையில் ரீல்ஸ் எடுக்கும் போது வழுக்கி விழுந்த பெண்! வைரல் வீடியோ!

ஒரு பெண் மழையில் நடனமாடி ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்யும் போது, கால் வழுக்கி கீழே விழுந்துவிடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 16, 2024, 02:21 PM IST
  • மழையில் ரீல்ஸ் எடுக்க விரும்பிய பெண்.
  • ஆனால் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
மழையில் ரீல்ஸ் எடுக்கும் போது வழுக்கி விழுந்த பெண்! வைரல் வீடியோ! title=

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி உள்ளனர்.  காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை அதனுடன் பொழுதைக் கழிக்கின்றனர். அதுவும் குறிப்பாக ரீல்ஸில் மூழ்கி கிடக்கின்றனர். காலையில் எந்திரிப்பதில் இருந்து பல் துலக்குவது, சாப்பிடுவது, நண்பர்களுடன் வெளியில் செல்வது, டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது, சமைப்பது என அனைத்தையும் ரீல்ஸ் ஆக பதிவிட்டு வருகின்றனர். மேலும் அதற்கு எவ்வளவு வியூஸ் வருகிறது? லைக் வருகிறது? கமெண்ட் வருகிறது? என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர். இதில் பல ரீல்கள் மற்றும் வீடியோக்கள் மிகவும் பிரபலமாகி, மிகவும் பாராட்டப்படுகின்றன. 

மேலும் படிக்க | பெண்ணிடம் பல்பு வாங்கிய பாம்பு... யாருகிட்ட!! நம்ப முடியாத வைரல் வீடியோ

2008ம் ஆண்டு வெளியான மேரே மெஹபூப் ஆல்பத்தில் இருந்து அல்கா யாக்னிக் பாடிய தாம் கே பராஸ் என்ற பாடலுக்கு ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் நடனமாடி ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அப்போது தான் மழை பெய்து நின்றது போல இருக்கும் அந்த இடத்தில் அந்த பெண் மொட்டை மாடியில் நடனமாட ஆரம்பித்த சில வினாடிகளில் பாசியின் மீது கால் வைத்ததில் தவறி கீழே விழுகிறார். இதில் அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது போல் தெரிகிறது. அதனுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. பலரும் இதனை பார்த்து அந்த பெண்ணை கேலி செய்து வருகின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by hakeem.khan86)

இன்ஸ்டாகிராமில் @hakeem.khan86 என்ற கணக்கில் இருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 27 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ள வைரல் ஆகி வருகிறது. பலரும் இதே போல வியூஸ்காக பல ஆபத்தான செயல்களை செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பது, பாறையின் உச்சிக்கு செல்வது, வேகமாக பைக் - கார் ஓட்டுவது போன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஒரு சிலர் துரதிஷ்டவசமாக தங்களது உயிரையும் இழந்துள்ளனர். ஆனாலும் இதனை பார்த்து திருந்தாமல் பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News