'மரத்தில் இருந்து திடீரென கொட்டும் தண்ணீர்' இணையத்தில் பரவும் வீடியோ வைரல்

மரத்தில் இருந்து தானாக அருவி போல் தண்ணீர் கொட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வியப்பின் உச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அதன் பின்னணி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 12, 2023, 11:06 AM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ.
'மரத்தில் இருந்து திடீரென கொட்டும் தண்ணீர்' இணையத்தில் பரவும் வீடியோ வைரல் title=

இயற்க்கை தொடர்பான இன்றைய வைரல் வீடியோ: பூமியில் உள்ள பல இடங்கள் மனிதர்களுக்கு அதிசயத்தை ஆச்சரியத்தையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். அது எப்படி உருவானது என்ற மர்மம் மட்டும் பல ஆண்டுகளாக விவரிக்க படாமலே தொடரும். அப்படியான ஒரு இடத்தில் நடந்த வைரல் வீடியோ பற்றி தான் இங்கு நாம் காண உள்ளோம். இங்கு நாம் காண உள்ள ஒரு விசித்திர வீடியோ முசுக்கொட்டை மரத்தை தொடர்புடையது. இந்த மரம் 60 நாட்களில் 6 அடி உயரம் வரை வேகமாகவும், அதிகபட்சமாக 30 அடி வரை மெதுவாகவும் வளரக்கூடியது. இந்த மரத்தில் இலைகள் பட்டுப்புழுவிற்கு மிக முக்கியமான அடிப்படை உணவாகவும், ஆடு மற்றும் பால்மாடுகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடான மாண்டினீக்ரோவில் ஒரு முசுக்கொட்டை மரத்தடியிலிருந்து தண்ணீர் பாய்வதை நாம் வீடியோவில் காணலாம். மரத்திலிருந்து தண்ணீர் வடியும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கண்ட இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

மேலும் படிக்க | ’நண்பா ஹெல்ப் மீ’ சிப்ஸ் திருட குரங்குக்கு உதவும் நாய்: பலே கில்லாடிங்கப்பா..! வைரல் வீடியோ

இந்த மல்பெரி மரத்தில் இருந்து வடியும் தண்ணீரை பார்த்தால் இந்த மரத்தரின் தண்டுக்குள் குழாய் பொருத்தப்பட்டிருப்பது போல் தண்ணீர் வெளியேறுவதைக் காணலாம். இந்த காட்சியானது சமூகவாசிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிலர் எப்படி எப்படி ஒரு மரத்தில் இருந்து தண்ணீரை வெளியேறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். மாண்டினீக்ரோவின் மல்பெரி மரங்கள் தண்ணீரை வெளியேற்றும் கிளிப் வெளியேற்றுவது இது முதல் முறை அல்ல.

உண்மையில், இது போன்ற காட்சி ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், ஓரிரு நாட்களுக்கு, மரங்களின் கிளைகளின் வழியாக நீரை பாய்ச்சுகின்றன.

மரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் அதிசய வீடியோ இங்கே காணுங்கள்: 

நீங்கள் தற்போது கண்ட காட்சிகள் மாண்டினீக்ரோவின் தலைநகரான போட்கோரிகாவில் உள்ள டைனோசா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. இந்த மர்மமான செயல்முறையின் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது இப்போது அறிவோம். 

போட்கோரிகாவில் உள்ள இந்த கிராமத்தில் பல நீரோடைகள் உள்ளன. இந்த நீரோடைகள் ஒரு நீரூற்றால் வளர்க்கப்படுகின்றன. வசந்த காலத்தில், பனி உருகும்போது அல்லது அதிக மழை பெய்யும் போது, நிரம்பி வழிகிறது. இந்த மல்பெரி மரங்களுக்கு அடியில் நீரூற்றின் சில பகுதியும் பாய்கிறது. இதன் விளைவாக, மரத்தில் இருந்து அருவி போல் நீர் வெளியேறுகிறது.

பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியமாக்கியுள்ள இந்த வீடியோ யூடியூப் பக்கத்தில் பகிறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஏற்கனவே 13.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் பலர் வியந்து போய் தங்களின் கருத்து தெரிவித்துள்ளனர்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’வாத்தியாரு எங்க போய்ட்டாரு’ கோபமாக இந்தி கற்றுக் கொடுக்கும் சிறுவனின் மைண்ட்வாய்ஸ் - வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News