Viral Video: பள்ளி வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்... மாணவியின் பதிலை பாருங்க!

Funny Viral Video: பள்ளியின் வகுப்பறையில், கையில் பூவுடன் ஒரு மாணவன், மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்திய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 15, 2023, 11:49 PM IST
  • அந்த பெண் ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் தனது பதிலை அளித்தது.
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது.
Viral Video: பள்ளி வகுப்பறையில் காதலை சொன்ன மாணவன்... மாணவியின் பதிலை பாருங்க! title=

Funny Viral Video: இத்தனை ஆண்டுகள் சினிமா வரலாற்றில், நாம் பல காதல் காட்சிகளை பாத்திருப்போம். அதிலும், குறிப்பாக, காதலன் காதலியிடம் காதலை சொல்வது, காதலி காதலனிடம் காதலை சொல்வது என பல பரிமாணங்களில் இந்த காட்சிகள் அனைத்தும் விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இது என்றுமே பழையது என்ற நிலையை அடையவில்லை. 

காதல் என்பது அனைத்து காலகட்டத்திலும் உயிர்ப்புடன் உலாவி வருகிறது. தற்போதைய 5ஜி யுகத்திலும், காதல் புது புது வடிவங்களை கண்டறிந்து தன்னை இந்த உலகில் தக்கவைத்துக்கொள்கிறது எனலாம். அந்த வகையில், காதல் என்ற உணர்வு காலங்கள் தோறும் தொடர்ந்துகொண்டே வரும் பயணமாக உள்ளது. 

மேலும் படிக்க | 'மொபைல் பார்த்தால் கண் போயிடும்...' குட்டி தம்பிக்கு க்யூட்டாக பாடம் எடுத்த சுட்டி குழந்தை!

இதில் முக்கிய பங்காற்றுபவர்கள் யார் என்றால், முதலில் பதின்பருவத்தினரை நோக்கிதான் கைகள் நீளும். இவர்கள்தான் அன்றைய காலகட்டத்தில் ஓர்க்-அவுட்டாக கூடிய காதல் காட்சிகளை சினிமாவில் நிர்ணயிக்கும் நபர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவும் வருங்காலத்தில் எந்த பாலிவுட் (அ) கோலிவுட் திரைப்படங்களிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.  

வைரல் வீடியோ: 

அந்த வைரல் வீடியோ பள்ளி வகுப்பறையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பள்ளி வகுப்பறை ஒன்றில், மாணவன் ஒருவன் கையில் பூவுடன் மாணவி முன் மண்டியிட்டு தன் காதலை கூறுகிறான். அதற்கு அந்த மாணவி, ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் அவளது பதிலை அளித்துவிடுகிறார். 

ஆம், அந்த மாணவனின் இடது கன்னத்தில், தனது வலது கையால் ஓங்கி ஒரு அறை ஒன்றைவிட்டார். இந்த வீடியோ பதின்பருவத்தினர் இடையே மிகவும் விரும்பப்படுகிறது. இதுபோன்று பல பேருக்கு நடைபெற்றிருந்தாலும், இதனை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், ஒவ்வொருக்கும் பழைய நினைவலைகள் கிளம்பலாம். எனவேதான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

"பொண்ணுங்கல திட்டதா மாமா... உன்ன நீயே திட்டிக்க மாமா..." என சிம்புவின் பீப் பாட்டை இவர்கள் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைப்பதற்கு ஏற்ற வீடியோவில் இதுவும் ஒன்று. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: கொல்ல வந்த பாம்பை கெத்தாக தடுத்த பூனை... நொடிக்கும் குறைவான நேரத்தில் ரியாக்சன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News