பகீர் சம்பவம்; மணமகளின் செயலால் மயங்கிய விழுந்த மணமகன்: வைரல் வீடியோ

Bride Groom Viral Video,சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2022, 06:13 AM IST
  • திருமண வீடியோ இணையத்தில் வைரல்
  • இணையதளவாசிகள் பல வித கமெண்டு
  • மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியதால் பரபரப்பு
பகீர் சம்பவம்; மணமகளின் செயலால் மயங்கிய விழுந்த மணமகன்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

மேலும் படிக்க | எனக்கு கல்யாணம் வேண்டாம்: அடம் பிடித்து ஷாக் கொடுத்த மணமகள், வைரல் வீடியோ

சமூக ஊடகங்களில்  பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணம் தொடர்பான வீடியோக்கள் எப்போது வெளிவந்தாலும், சலசலப்பை உருவாக்குகின்றன. சில சமயங்களில் திருமண ஊர்வலங்களின் வேடிக்கையான வீடியோக்களும், சில சமயம் மணப்பெண் மணமகனின் வேடிக்கையான வீடியோக்களும் வைரலாகின்றன. இன்றைய திருமணங்களில், மணமகன் மற்றும் மணமகளின் பாணி மிகவும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் உள்ளது. 

தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பெண் ஒருவர் திருமணம் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை காட்டிலும் அதனைக் கேட்ட மணமகன் மயங்கி விழுந்த சம்பவம்தான் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாலியப்பல் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் வரும் ரேமு கிராமத்தில் நடைபெற்றது. அதன்படி, ஜலேஷ்வர் போலீஸ் எல்லைக்குட்பட்ட தேவ்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் மணமகளின் ரேமு கிராமத்தில் நடைபெற இருந்த தனது திருமணத்திற்கு சென்றிருக்கிறார்.

அங்கு திருமணத்திற்கான சடங்குகள் அனைத்தும் நடைபெற்று வந்த போது திடீரென, மணமேடையில் இருந்து எழுந்த மணமகள் இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை, எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மீண்டும் எப்படி திருமணம் செய்துக்கொள்வது எனக் கேட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார். மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியதால் மணமகன் மயங்கி விழுந்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களைப் பெற்றுள்ளதோடு மில்லியன் கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையதளவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | சாக்லேட்டிலிருந்து உருவாகும் பாம்பு: சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News