Viral Video: சிறுத்தையும் மிரள வைக்கும் தாக்குதல்... சின்னபின்னமான மலைப்பாம்பு...

Viral Video of Leopard Hunt: வன வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கை. வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சரியாக பொருந்தும் வாழ்க்கை. காட்டில் வாழும் சில ஆபத்தான விலங்குகள் மற்ற உயிரினங்களை கொன்று தனது பசியை தீர்த்துக் கொள்கின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2024, 04:36 PM IST
  • மலைப்பாம்பு ஒன்று சிறுத்தையால் வேட்டையாடி கொல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
  • வைரலாகும் சிறுத்தை வேட்டை வீடியோ.
  • வலிமையான விலங்குகள் மத்தியில் ஏற்படும் சண்டை மிகவும் மிரள வைப்பதாக இருக்கும்.
Viral Video: சிறுத்தையும் மிரள வைக்கும் தாக்குதல்... சின்னபின்னமான மலைப்பாம்பு... title=

Viral Video of Leopard Hunt: வன வாழ்க்கை ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கை. வல்லவன் வாழ்வான் என்ற தத்துவம் சரியாக பொருந்தும் வாழ்க்கை. காட்டில் வாழும் சில ஆபத்தான விலங்குகள் மற்ற உயிரினங்களை கொன்று தனது பசியை தீர்த்துக் கொள்கின்றன. பொதுவாக வலிமையான யானைகள், சிங்கங்கள், புலிகள், முதலைகள் மற்றும் சிறுத்தைகள் இரையை நொடிகளில் கொன்றுவிடும். ஆனால் சில சமயங்களில் எதிர்பாராவிதமாக வலிமையான் விலங்குகள் மத்தியில் ஏற்படும் சண்டை மிகவும் மிரள வைப்பதாக இருக்கும். 

சமீபத்தில் மலைப்பாம்பு மற்றும் பெரிய முதலை ஒன்று சிறுத்தையால் வேட்டையாடி கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி சிறுத்தையின் வேட்டையாடும் யுத்தியை காட்டுகிறது. இந்த வீடியோவில் நீரில் பலமான விலங்காக கருதப்படும் முதலையையும், மிகப்பெரிய பாம்பு ஒன்றயும் சிறுத்தை அனாயாசமாக தாக்கி கொல்கிறது. நிலத்தில் மட்டுமல்ல நீரிலும்  நான் சூப்பர் ஸ்டார் தான் என்பதை வைராலாகும் வீடியோ மூலம் அறிந்து கொள்ளலாம்.

இந்த வீடியோவில், மலைப்பாம்பு மற்றும் முதலை போன்ற பெரிய பாம்பை சிறுத்தை வேட்டையாடுவதைக் காணலாம்.  மற்றொறு மலைப்பாம்பை சிறுத்தை தாக்குகிறது. ஆனால் நழுவி தண்ணீருக்குள் சென்று விட்டது. அடுத்த காட்சியில் சிறுத்தை ஒன்று முதலையை வேட்டையாடுகிறது. 

தண்ணீரில் பலம் வாய்ந்த முதலையை பார்த்த சிறுத்தை அதை நோக்கி நீந்தி சென்ற நிலையில், முதலை சிறுத்தையை தாக்கும் என்று நாம் எதிர்பார்ப்போம். ஆனால் முதலையின் மீது பாய்ந்த சிறுத்தை அதை நன்றாக பற்றிக் கொண்டது. சிறுத்தைக்கு சற்றும் சளைக்காத முதலை வாயை அகல விரித்து அதை விரட்ட முயன்றது. இருப்பினும் சிறுத்தை பின்வாங்கவில்லை. முதலை கழுத்தை நெரித்து,  இறக்கும் வரை விடவில்லை.

மேலும் படிக்க | சிறுவனின் உடலை வில்லாக வளைத்து ஸ்கிப்பிங் ஆடும் ஆப்பிரிக்க இளைஞர்கள் - வைரல் வீடியோ

வைரலாகும் சிறுத்தை வீடியோவை இங்கே காணலாம்

 

'Nature is Amazing' என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுத்தை இவ்வளவு வலிமையாக இருக்கும் என்று நாங்க எதிர்பார்க்கவேயில்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய முதலையை குட்டி சிறுத்தை வேட்டையாடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக பலர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | Viral Video: பிளாட் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஷூவை திருடும் ஸ்விக்கி டெலிவரி பாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News