ஊர்வன வகுப்பை சேர்ந்த ஆமைகள் எப்போதும் மெதுவாக ஊர்ந்து செல்பவை, இவை பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். இவற்றின் பாதுகாப்புக்கென முதுகு பகுதியில் பிரத்யேகமாக பெரிய ஓடு அமைந்திருக்கும். காலநிலைக்கு தகுந்தவாறு உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை இவை. ஆமைக்கூட்டங்கள் சில இரு அணியாக பிரிந்து தண்ணீரில் விளையாடும் ஒரு அற்புதமான இதுவரை யாரும் கண்டிடாத காட்சி ஒன்று இணையத்தில் பலரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.
ட்விட்டரில் 'எ பீஸ் ஆஃப் நேச்சர்' என்கிற கணக்கு பக்கத்தில் ஆமைகளின் வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், நீர் சூழ்ந்த ஒரு குட்டை ஒன்று உள்ளது, அதனருகே ஆள் உயர புற்கள் வளர்ந்து நிரம்பி கிடக்கின்றன. அந்த நீரினுள் பெரிய மரக்கட்டை ஒன்று மிதந்து கொண்டு இருக்கின்றது. அந்த மரக்கட்டையின் இருபக்கமும் ஆமைகள் இரு அணிகளாக பிரிந்து அமர்ந்து இருக்கின்றது. அவை சீசா விளையாடுவது போல மரக்கட்டைகளை நீரை சாய்த்து கொண்டு இருக்கின்றது. ஒவ்வொரு தடவையும் நீரில் கட்டையை சாய்க்க சாய்க்க ஒவ்வொரு ஆமையாக நீருக்குள் விழுகிறது. இறுதியாக ஒரு அணியில் உள்ள ஆமைகள் அனைத்தும் நீருக்குள் விழுந்துவிட, ஒரு அணி மட்டும் ஒரு ஆமையை இழந்து வெற்றிபெற்றுள்ளது.
I like this game pic.twitter.com/gQY6TEd7gA
— A Piece of Nature (@apieceofnature) June 9, 2022
இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவுடன் நான் இந்த விளையாட்டை விரும்புகிறேன் என்கிற கேப்ஷனும் சேர்த்து பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர். அதோடு இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க | மணமகள் மீது பைத்தியம் ஆன மணமகனின் குத்தாட்டம்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR