So Cute சறுக்கி விளையாடும் பாண்டாக்களின் குழந்தைத்தனம்

விளையாட்டு எப்போதும் குதூகலத்தைத் தரும், அது விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும் தான்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2021, 02:02 PM IST
So Cute சறுக்கி விளையாடும் பாண்டாக்களின் குழந்தைத்தனம் title=

சறுக்கி விளையாடும் பாண்டாக்களின் வீடியோ மனதை மயக்குகிறது. சறுக்கு பலகையில் ஏற முயற்சிக்கும்போது, இந்த அழகான பாண்டா குட்டிகள் விழுந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது ரசிக்கத் தூண்டுகிறது. தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கின்றன.

இந்த வீடியோவை பார்க்கும்போது, சிறுவயதியில் சறுக்கி விளையாடிய நினைவலைகள் மனதை நெகிழச் செய்கின்றன. வெகுளியான குட்டி பாண்டாக்களின் விளையாட்டை பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான எண்ணங்கள் தோன்றுகின்றன. ஆனால் அனைவருக்கும் தோன்றும் ஒரே பொதுவான எண்ணம், 'விளையாட்டு எப்போதும் குதூகலத்தைத் தரும், அது விளையாடுபவர்களுக்கு மட்டுமல்ல, பார்ப்பவர்களுக்கும் தான்' என்பதே.  

பாண்டாக்கள் சறுக்குமரத்தில் சறுக்கி விளையாடுவதையும் உருட்டுவதையும் காட்டும் இந்த வீடியோ வெளியாகி இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்துள்ளது. பாண்டாக்கள் ஒரு பூங்காவின் சறுக்கு மரத்தில் சறுக்கி விளையாடி மகிழ்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

சிறு குழந்தைகளைப் போலவே, பாண்டாக்களும் ஸ்லைடில் ஏறி ஒருவருக்கொருவர் முட்டி மோதி விளையாடுகின்றன. மேலே ஏற முயற்சிக்கும்போது,  விழுந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டாலும் அதை அவை அனுபவிக்கின்றன என்பது தெரிகிறது.   

அடிக்கடி நேர்மறையான வீடியோக்களைப் பகிரும் ‘Buitengebiden’என்ற ட்விட்டர் பக்கம், ”பாண்டா ஸ்லைடு! என்ற தலைப்பில் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டது,இந்த வீடியோ வைரலாகி சுமார் லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. ஒரு பயனர் எழுதினார், "விளையாட்டு மைதான சறுக்கு மரத்தில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியானது, குழந்தைகள் இதை குதூகலத்துடன் வேடிக்கை பார்க்கிறார்கள்." 

மற்றொருவர், "பாண்டாக்களுடன் விளையாடுவது என்பது, மகிழ்ச்சி சிகிச்சையாக அங்கீகரிக்கப்பட வேண்டும்." என்கிறார்.
"இதுவே மிகச் சிறந்த வேலையாகத் தெரிகிறது" என்று மூன்றாவது நபர் கருத்து சொல்கிறார். மற்றொருவரோ, இதை தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். "இந்த வீடியோவைப் பார்ப்பதை நிறுத்தவே முடியாது!!!

Also Read | 160 அடி உயரத்தில் டிக்டாக் வீடியோ எடுத்த பெண் கீழே விழுந்து மரணம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News