கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ..

பூனை ஒன்று, இன்னொரு பூனையை காதை பிடித்து இழுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2024, 06:34 PM IST
  • பூனைகளின் க்யூட் வீடியோ
  • காதைப்பிடித்து இழுத்து செல்லும் பூனை
  • வைரல் வீடியோ!
கீழே வர அடம்பிடித்த பூனை..காதை பிடித்து இழுத்து செல்லும் இன்னொரு பூனை! வைரல் வீடியோ.. title=

பல சமயங்களில், மிருகங்கள் செய்யும் வீடியோவை பார்க்கும் போது மனிதர்கள் செய்வதை விட மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும். அவை பார்க்க வேடிக்கையாக இருப்பதோடு, நம்மை ஆச்சரியப்படவும் வைக்கும். அதிலும் இந்த பூனைகள் செய்யும் சேட்டைகள் இருக்கிறதே, அப்பப்பா..சொல்லவே வேண்டாம். மனிதர்கள் பேசுவது புரிந்தாலும், புரியாதது போல தெனாவட்டாக இருக்கும் ஜீவராசி இது. தனது முதலாளி இறந்து விட்டால் கூட, “ஐயய்யோ..நமக்கு யார் சாப்பாடு வைப்பது” என்பதுதான் பூனைகளின் பெரிய யோசனையாக இருக்கும். அப்படிப்பட்ட பூனை ஒன்று, இன்னொரு பூனையை காதைப்பிடுத்து இழுத்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாதி மரத்தில் நிற்கும் பூனை ஒன்று கீழே வர அடம் பிடிக்கிறது. அதை இழுத்து வர இன்னொரு பூனை பாடாய் படுகிறது. 

இந்த வீடியோவை பார்ப்பதற்கு, அடம்பிடிக்கும் குழந்தையை அதன் அம்மா காதை பிடித்து திருத்துவது போல அந்த பூனை, இன்னொரு பூனையை திருத்துவது போல உள்ளது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அந்த இரண்டு பூனைகளுமே குட்டி பூனைகள்தான். இதை பார்த்த நெட்டிசன்கள், இரண்டுமே க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ, தற்போது வரை 2.5 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ள்ளது. பல ஆயிரம் வியூஸ்களை கடந்த இந்த வீடியோவை, நெட்டிசன்கள் தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | சாலையில் கவர்ச்சியாக நடந்து சென்ற இளம் பெண்! பிறகு என்ன நடந்தது என்று பாருங்கள்!

பூனைகள் எவ்வளவு புத்தி கூர்மை வாய்ந்தவை?

  • பூனைகள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் தீர்த்துக்கொள்ளுமாம்.
  • இவற்றிற்கு நல்ல நினைவுத்திறன் இருக்கிறதாம். 
  • எந்த விஷயத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இவற்றிற்கு இருக்கிறது. 
  • பூனைகள், தங்களின் உடல் மொழிகள் மூலம் பிறருடன் பேசுமாம்.
  • தன்னை சுற்றி இருக்கும் சூழலை புரிந்து அறிந்து கொள்ளும் விலங்குகள் இவை. 
  • மனிதர்களுடன் நன்றாக உறவு கொள்ளும் விலங்குகளுள் ஒன்று, பூனை.

மேலும் படிக்க | சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News