Viral Video Of A Boy Crying : சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண்மணி, டிக்கெட் எடுக்க நடத்துனரிடம் சண்டை போட, அவருக்கு அருகில் இருக்கும் அவரது குழந்தை அழுது கொண்டே டிக்கெட் எடுக்க கூறுகிறது. இதனை, நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
டெல்லி அரசாங்கம், பெண்களுக்கு இலவச பஸ் சேவைகளை வழங்குகிறது. இது டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு கீழ் வருகிறது. இதன்படி, பேருந்தில் பயணிக்கும் பெண்கள், DTC பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம். ஆனால், அவர்கள் தங்களுடன் அழைத்துச்செல்லும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும். தற்போது வைரலாகும் வீடியோவில் இதுதான் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது.
வைரல் வீடியோ:
தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நடத்துனருக்கும், பெண் பயணிக்கும் சண்டை நடக்கிறது. அந்த நடத்துனர் குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என அந்த பெண்மணியிடம் கூற, அதற்கு அந்த பெண் எடுக்க முடியாது என்று கூறி சண்டை போடுகிறார்.
இது இப்படியே சண்டையாக உருவெடுத்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் மகன் டிக்கெட் எடுத்துவிடுமாறு கெஞ்ச ஆரம்பிக்கிறார். ஆனால், அந்த பெண் அப்போதும் மனம் இறங்காமல் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனரிடம் சண்டையிடுகிறார்.
DTC बस में बच्चे को फ्री मैं बैठाने के लिए महिला का हाई वोल्टेज ड्रामा#viralvideo pic.twitter.com/hIz1oTcorM
— NBT Hindi News (@NavbharatTimes) December 11, 2024
2 நிமிடங்கள் இப்படியே தொடரும் இந்த வீடியோவில், கடைசி வரை அந்த பெண் தனது குழந்தைக்கு டிக்கெட் எடுக்கவே இல்லை. இடையில் அந்த நடத்துனர் “காசில்லை என்றால் டிக்கெட் எடுக்க வேண்டாம்” என்று கூற, அதற்கு அந்த பெண் ஓவராக டென்ஷன் ஆகிறார். அருகில் இருந்த அவரது மகன் அழ ஆரம்பிக்கிறான்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “அந்த குழந்தைக்காகவாவது மனம் இறங்கி அந்த பெண் டிக்கெட் எடுத்திருக்கலாம்” என்று கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | சவப்பெட்டியில் இருந்து முழித்து பார்த்த பெண்!! பயமுறுத்தும் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ