Gratuity Rules: 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கிடைக்குமா?

Gratuity Rules: ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் பணிக்கொடையைப் பெற தகுதி அடைவதாக விதிகள் கூறுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 11, 2024, 04:20 PM IST
  • கிராஜுவிட்டி தொகை எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
  • 5 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு பணி செய்தவர்களுக்கான விதிகள் என்ன?
  • நோட்டீஸ் பீரியடும் கணக்கிடப்படுமா?
Gratuity Rules: 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்தால் பணிக்கொடை கிடைக்குமா? title=

Gratuity Rules: பணிக்கொடை, அதாவது கிராஜுவிட்டி என்பது பணியாளர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு முக்கியமான தொகையாகும். இது பணியாளர்கள் நீண்ட காலத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு ஈடாக வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால், அவர் பணிக்கொடையைப் பெற தகுதி அடைவதாக விதிகள் கூறுகின்றன. 

ஆனால், அவ்வப்போது பணியாளர்கள் குறித்து பலருக்கு பல கேள்விகள் வருவதுண்டு. ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தில் 4 ஆண்டுகள் 11 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அதாவது 5 ஆண்டுகள் நிறைவடைய 1 மாதம் மட்டுமே குறைவாக இருந்தால், நிறுவனம் அவருக்கு பணிக்கொடை வழங்குமா? இப்படி பல கேள்விகள் உள்ளன. பணிக்கொடை பற்றி பொதுவாக இருக்கும் சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளை இங்கே காணலாம்.

Gratuity: 5 வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு பணி செய்தவர்களுக்கான விதிகள் என்ன?

ஒரு ஊழியர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் பணிபுரிந்தால், அவரது சேவை முழு 5 ஆண்டுகளாகக் கருதப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகளின் படி பணிக்கொடைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் அவர் இதை விட குறைவான காலம் அதாவது 4 வருடங்கள் 7 மாதங்கள் அல்லது நான்கு வருடங்கள் ஏழரை மாதங்கள் பணிபுரிந்திருந்தால், பணிக்காலமாக 4 வருடங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அந்த சூழ்நிலையில் கருணைத் தொகை வழங்கப்படாது.

Notice Period: நோட்டீஸ் பீரியடும் கணக்கிடப்படுமா?

ஆம், பணிக்கொடை காலத்திற்கான கணக்கீட்டில், ​​பணியாளரின் நோட்டீஸ் காலமும் கணக்கிடப்படுகிறது. 4 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் பணிபுரிந்த பிறகு ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்தார் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ராஜினாமா செய்த பிறகு, அவர் இரண்டு மாதங்கள் நோட்டீஸ் பீரியடில் பணி புரிந்திருக்கிறார் என்றால், நிறுவனத்தில் அவரது மொத்த சேவை 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களாக கணக்கிடப்படும். பணிக்காலம் 5 ஆண்டுகளாக கருதப்பட்டு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | EPF Withdrawal: PF Claim நிராகரிக்கப்படாமல் இருக்க... தவிர்க்க வேண்டிய சில தவறுகள்

சில நேரங்களில் 5 ஆண்டு விதி பொருந்தாது

பணியில் இருக்கும் போது ஒரு ஊழியர் இறந்தால், 5 ஆண்டுகள் வேலை என்ற நிபந்தனை பொருந்தாது. அத்தகைய சூழ்நிலையில், பணியாளரின் பணிக்கொடை கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையும் அவரது நாமினிக்கு வழங்கப்படுகிறது.

Gratuity Formula: கிராஜுவிட்டி தொகை எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

கிராஜுவிட்டி தொகை எனப்படும் கருணைத் தொகை ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இந்த சூத்திரம் - (கடைசி சம்பளம்) x (நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை) x (15/26). கடைசி சம்பளம் என்பது நீங்கள் கடைசியாக கடந்த 10 மாதங்களில் பெற்ற சம்பளத்தின் சராசரி. இந்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் கமிஷன் ஆகியவை அடங்கும். ஒரு மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் வார விடுமுறை என்பதால், 26 நாட்கள் கணக்கிடப்பட்டு, 15 நாட்களின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

நிறுவனத்திற்கான விதி என்ன?

ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்தால், அந்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் பணிக்கொடையின் பலனை வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. நிறுவனம் தவிர, கடைகள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இந்த விதியின் வரம்பிற்குள் வருகின்றன.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: 8வது ஊதியக்குழு வருமா, வராதா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News