Bima Sakhi Yojana News: எல்ஐசி பீமா சகி திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? பீமா சகி திட்டத்தில் எவ்வளவு நிதி உதவி கிடைக்கும்? எத்தனை வருஷத்துக்கு கிடைக்கப் போகுது? எல்ஐசி பீமா சகி திட்டத்தில் சேர எப்படி அப்ளை பண்ணுவது? போன்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
எல்ஐசி பீமா சகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2024 டிசம்பர் 9 (திங்கள்கிழமை) தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்குவதாகும். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எல்ஐசி முகவர்களாக மாறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மாதந்தோறும் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். இது தவிர, பாலிசி எடுத்து கொடுத்தால் அவர்களுக்கு கமிஷனும் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எந்த பெண்ணும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 18 வயது முதல் 70 வயது வரை உள்ள எந்தப் பெண்ணும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நீங்க விண்ணப்பிக்க விரும்பினால் அருகில் உள்ள எல்ஐசி கிளைக்குச் சென்று முழு விவரங்களை பெறலாம். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பிக்கும் முன், வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ஒருவர் ஏற்கனவே எல்ஐசி முகவராக அல்லது பணியாளராக இருந்தால், அவரது உறவினர் (கணவன்/மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள்) இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. மேலும், எல்ஐசியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர் அல்லது முன்னாள் முகவர் அல்லது தற்போதைய முகவர் எல்ஐசி பீமா சகி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
பெண்களுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
எல்ஐசி பீமா சகி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு சில உதவித்தொகை அதாவது சம்பளமும் வழங்கப்படும்.
முதல் வருடம் மாதம் 7 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
இரண்டாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 6,000 ரூபாய் வழங்கப்படும்.
மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வழங்கப்படும்.
சம்பளம், கமிஷன், போனஸ் கிடைக்குமா?
மூன்று ஆண்டுகள் சிறப்பு பயிற்சியின் போது சம்பளம் தவிர, பெண்களுக்கு பாலிசிக்கான கமிஷனும் கிடைக்கும். அதாவது பயிற்சி காலத்தில் நீங்கள் செயல்படுத்தர பாலிசிக்கான கமிஷனும் கிடைக்கும். மேலும் எல்ஐசி ஏஜெண்டுக்கான சிறப்பு பயிற்சியின் போது சில இலக்குகள் நிர்ணயிக்கப்படும். அந்த இலக்குகளை அடைந்தால் சம்பளம், கமிஷன் தவிர போனஸும் கிடைக்கும்.
எத்தனை பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்?
பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள இரண்டு லட்சம் பெண்களுக்கு ஓராண்டில் எல்ஐசி ஏஜெண்டுகளாக மாற பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் முதல் கட்டமாக 35 ஆயிரம் பெண்கள் காப்பீட்டு முகவர்களாக பணியமர்த்தப்படுவார்கள். இதன் பின்னர் மேலும் 50 ஆயிரம் பெண்களுக்கு எல்ஐசி பீமா சகி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
என்னென்ன வேலைவாய்ப்பு கிடைக்கும்?
எல்ஐசி பீமா சகி திட்டத்தில் மூன்று வருட பயிற்சியை முடித்த பிறகு, பெண்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டம் பெற்ற பெண்கள் பீமா சகி எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபீசராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்களை முன்னேற்றத்திற்கான திட்டம்
முதற்கட்டமாக பீமா சகி யோஜனா திட்டத்தை ஹரியானா மாநிலத்தில் செயல் படுத்தப்படுகிறது. அதன்பிறகு நாடு முழுக்க படிபடியாக இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்காக மத்திய, மாநில அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த பீமா சகி யோஜனாவும் இருக்கிறது. பெண்களை பொருளாதார அளவில் முன்னேற்றத்திற்காக பீமா சகி யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க - குழந்தைகள் எந்த வயது வரை பெற்றோருடன் தூங்கலாம்? இதை தெரிஞ்சிக்கோங்க..
மேலும் படிக்க - PMEGP லோன் திட்டம் : ரூ.1 கோடி வரை கடன், 35% மானியம் - எப்படி பெறுவது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ