ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!

இந்தியா முழுவதும் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார்க்கு அடுத்து பான் கார்டு உள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் மத்திய அரசு கொண்டுவருகிறது. அந்தவகையில் பான் கார்டும் ஒரு முக்கிய அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது. 18வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆதார் மற்றும் பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டது. தற்போது குழந்தைகளுக்கும் பான் கார்டு தேவை என்ற நிலை மாறிவருகிறது. மேலும் படிப்போம்.  

Written by - Keerthana Devi | Last Updated : Dec 10, 2024, 12:17 PM IST
    • மைனர் பான் கார்டு அவசியம்
    • விண்ணப்பிக்கும் முறை
    • ஏன் இதன் தேவை அதிகரிக்கிறது
ஏன் இந்த மைனர் பான் கார்டு அறிமுகம்! இவற்றின் அவசியம் என்ன.. விண்ணப்பிப்பது எப்படி!  title=

மைனர் பான் கார்டு தேவை: குழந்தைகளுக்கு ஏன் பான் கார்டு அவசியம் என்று இங்குத் தெரிந்து கொள்ளுங்கள். எதற்காக மத்திய அரசு குழந்தைகளுக்கும் பான் கார்டு தேவை என்று கூறியது என்று முழு விவரம் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு அவசியம்: பான் கார்டு என்பது இந்தியக் குடிமகனாக இருப்பதற்கான அடையாள அட்டை. இது வரி செலுத்துவதில் தொடங்கி வங்கிக் கணக்கு ஆரம்பிக்கும் வரை எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒருவர் கடன் வாங்கினாலும் அல்லது சொத்து வாங்கினாலும் தன் அனைத்து அடையாள சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளன. ஆனால் தன்னுடைய தகவல் அனைத்தும் யாரும் தவறாக உபயோகிக்கக்கூடாது என்பதற்காக ஒரு அடிப்படை ஆதாரமாக பான் கார்டு கேட்கப்படுகின்றனர். 

Minor Pan Card

பான் கார்டு தகுதியுடையவர்கள்: பான் கார்டு 160இன் கீழ் இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்குட்பட்ட சிறிய குழந்தைகளும் பான் கார்டு வாங்க தகுதியுடையவர்கள் என்று ஒரு புதியக் கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளது. பான் கார்டுக்கு தகுதியுடையவர்கள் முதலில் இந்தியராக இருத்தல் வேண்டும். இந்தியக் குடிமகன் அயல் நாடு சென்று வேலைப் பார்த்தாலும் அல்லது படிக்கச் சென்றாலும் பான் கார்டு உங்களை வழி நடத்தும். அதாவது பான் கார்டு வைத்திருக்கும்போது நீங்கள் ஒரு நாட்டின் குடிமகன் என்று காட்டிக்கொடுக்கும். பான் கார்டு விண்ணப்பம் செய்யத் தகுதியான வயது 18 வயதுப் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தற்போது இந்த தகுதியான வயதைத் தளர்த்தி யார் வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம் என்று புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. 

மைனர் பான் கார்டு: 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களுக்கு வழங்கும் பான் கார்ட்டை மைனர் பான் கார்டு என்று அழைக்கப்படுகிறது. இந்த பான் கார்டு குழந்தைகள் பெயரில் விண்ணப்பம் செய்து வாங்கினாலும், இதனைக் குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த மைனர் பான் கார்டில் குழந்தைகளின் புகைப்படம் மற்றும் கையொப்பம் இடம்பெறாது. சிறுவர்கள் 18வயது பூர்த்தி செய்த பின்னர் அவர்கள் மீண்டும் பான் கார்ட்டை வைத்து புதிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். புதிதாக அப்டேட் செய்யும்போது மீண்டும் தேவையான ஆவணங்கள் அனைத்தும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த மைனர் பான் கார்டு தற்போது எதற்கு முன்னுரிமைக் கொடுக்கப்படுகிறது என்றால் குழந்தைகள் பெயரில் எதிர்காலத்தில் அவர்கள் பெயரில் சொத்து சேர்ப்பதற்காகவும் மற்றும் முதலீடு செய்வதற்காகவும் இது பயன்பெறுகிறது. பெற்றோர்கள் தங்களின் நிதிசார்ந்த சொத்துக்களில் குழந்தைகள் பெயர் சேர்க்க விரும்பினால் அப்போது இந்த மைனர் பான் கார்டு உபயோகமாக இருக்கும். குழந்தைகள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கும்போது ஆதாருடன் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. 

மேலும் படிக்க| மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாத 4 ராசிக்காரர்கள்!

மைனர் பான் கார்டு விண்ணப்பம் செய்வது எப்படி: நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.  பின்னர் தேவையான விவரங்களை உள்ளிடவும். சிறார்களுக்கு பான் கார்டைப் பயன்படுத்துவதற்கான சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும். பான் கார்டு பதிவுக் கட்டணமான 107 ரூபாயைச் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். சிறுமியின் பெற்றோரின் முகவரி மற்றும் அடையாளச் சான்று இதில் கட்டாயம் தேவைப்படும். விண்ணப்பதாரரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றும் தேவைப்படுகிறது. மைனர் பான் கார்டு யார் பெயரில் துவங்குகின்றாரோ அவர்கள் பெயரில் ஆதார் அட்டை ஏதோ ஒரு இந்திய உரிமம் அட்டையை அடையாள சான்றாகச் சமர்ப்பிக்கலாம். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் தங்களின் ஆதார் அட்டை, தபால் அலுவலக பாஸ் புக், சொத்து பதிவு ஆவணம் அல்லது அசல் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவை முகவரி ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். 

பான் கார்டு தேவை: வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், டிமேட் கணக்கு தொடங்குவதற்கும், கடன் வாங்குவதற்கும், சொத்து வாங்குவதற்கும், பத்திரங்களில் முதலீடு செய்வதற்கும், அரசு வழங்கும் பிற நிதி வசதிகளுக்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. இந்த ஆவணம் செல்லுபடியாகும் அடையாள சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. https://grfsconsultancy.in/pancard/docs/MINOR%20(New).pdf

மேலும் படிக்க | வாட்ஸ்அப் சூப்பர் அப்டேட் வரபோகுது..2025 புத்தாண்டில் இனி உங்களுக்கு ஹாப்பிதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News