கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்; வைரல் வீடியோ

கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து மதுபானங்கள் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 8, 2021, 01:14 PM IST
கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுபானம்; வைரல் வீடியோ title=

திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கொடைக்கானல் விளங்குகிறது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

அதன்படி தற்போது கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் தொடர்ந்து மதுபானங்கள் மற்றும் போதை பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர்.

ALSO READ | போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில்  குதித்தவர் பரிதாப மரணம்..!!

இந்த நிலையில் பூண்டி ஊராட்சி பேருந்து நிறுத்தத்தில் பட்டப்பகலில் மது பானங்களை அரசு அனுமதியின்றி கள்ளச்சந்தையில் சுற்றுலா பயணிகளுக்கும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். 

 

 

எனவே மாவட்ட காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மேல்மலை பகுதியான பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை, பூண்டி கவுஞ்சி, பேலூர் முதல் அனைத்து மலை கிராம பகுதிகளிலும் மதுபானம் உட்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் தற்போது மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

முன்னதாக கடந்த மாதம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து சிலர் போதை காளான்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும் கொடைக்கனல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவ‌ல்துறை சார்பில் ப‌ல்வேறு நட‌வ‌டிக்கைக‌ள் எடுக்க‌ப்ப‌ட்டாலும் போதை பொருள் விற்ப‌னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: தொண்டர்களே, உங்கள் இடத்திற்கே வந்து நேரில் சந்திக்கிறேன்: சசிகலா அறிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News