Bizarre Truth: 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2021, 08:00 PM IST
  • 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
  • 35 குழந்தைகளும் திருமணத்தில் கலந்துக் கொண்டனர்
  • 126 பேரக்குழந்தைகள் புடைசூழ நடைபெற்றது திருமணம்
Bizarre Truth: 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்  title=

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனைவி இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்துக் கொள்வதே தவறு என்று நினைக்கும் இன்றைய சூழலில் பல மனைவிகளின் முன் 37வது முறையாக ஒருவர் திருமணம் செய்திருக்கிறார். இது கதையல்ல, நிஜம்…

இந்த விநோத திருமணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை, இந்த வீடியோ எந்த நாட்டில் இருந்து பதிவேற்றப்பட்டது என்பதும் சரியாக தெரியவில்லை.  திருமணம் கால்கட்டு என்று தமிழகத்தில் ஒரு செலவாடை உண்டு. ஆனால் 37 முறை திருமணம் செய்துக் கொண்டால் அதற்கு என்ன சொல்வது?

அதிலும் இந்த மனிதர் 28 மனைவிகள் முன்னிலையில், 35 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் புடைசூழ 37 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இதற்கு முன்னதாக இந்த ”நித்ய கல்யாண” மாப்பிள்ளை 36 முறை திருமணம் செய்து கொண்டார் என்றும், இவருக்கு மிகப் பெரிய குடும்பம் இருப்பதாக வீடியோ கூறுகிறது. புதிய மணமகள் உட்பட, 29 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 128 பேரக்குழந்தைகள் இப்போது ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர்.

ஐபிஎஸ் ரூபின் சர்மா என்பவர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். “தைரியமான மனிதர்... 28 மனைவிகள், 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகளுக்கு முன்னால் 37 வது திருமணத்தை செய்துக் கொண்டுள்ளார்”என்று பதிவிட்டுள்ளார்.

Also Read | Bizzarre! கதையல்ல நிஜம்! 37 நாட்களில் 4 திருமணம், 3 விவாகரத்து சாத்தியமே!!

இந்த வீடியோவைக் பார்த்த பலருக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சிலருக்கோ திகைப்பு இன்னும் நீங்கவில்லை. ஒரு மனைவியுடனே ஒத்துப் போகவில்லை, இத்தனை மனைவிகளுடன் கூட்டுக் குடும்பமாக எப்படி வாழ்கிறார் இந்த அதிசய மனிதன் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

ஆனால், பலர் இந்த புது மாப்பிள்ளையை விமர்சிக்கின்றனர். 21 ஆம் நூற்றாண்டிலும் இப்படி நடைபெறுமா? இது உண்மையா என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை, இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட நாடு எது என்பதும் தெரியவில்லை.

Also Read | உலகின் மிகப்பெரிய குடும்பம்... ஒன்றல்ல இரண்டல்ல.. 27 மனைவிகள், 150 குழந்தைகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News