Viral Video: பனி புயலால் உண்டான விபரீதம்! பனியால் உறைந்த மானின் முகம்!

கடுமையான குளிர்கால புயல் காரணமாக மான் ஒன்று அதன் வாய், கண்கள் மற்றும் காதுகள் முற்றிலும் பனியினால் மூடப்பட்டு உறைந்த நிலையில் காணப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2022, 04:57 PM IST
  • அமெரிக்கா மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் தாக்கியுள்ளது.
  • கடுமையான குளிர்கால புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மான்.
  • Reddit தளத்தில் பகிரப்பட்ட மான் வீடியோ
Viral Video: பனி புயலால் உண்டான விபரீதம்! பனியால் உறைந்த மானின் முகம்! title=

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். தினமும் எண்ணிலடங்கா வீடியோக்களும் புகைப்படங்களும் பகிரப்பட்டுகின்றன. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. எனினும் சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகின்றன. அந்த வகையில், பனி புயலினால் பெரிது பாதிக்கப்பட்ட மானொன்றின் வீடியோ மிகவும் வரலாகி வருகிறது.

கடுமையான குளிர் காலநிலை நிலவும் அமெரிக்கா மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் தாக்கியுள்ள நிலையில், இது "நூற்றாண்டின் பனிப்புயல்" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதனால், மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 60 பேர் கடுமையான பனி காரணமாக இறந்து விட்டனர். உலகின் பல பகுதிகளும் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையுடன் போராடுகின்றன. இயற்கையின் அழிவுக்கு மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பலியாகி வருகின்றன. 

சமீபத்திய வீடியோவில், கடுமையான குளிர்கால புயல் காரணமாக மான் ஒன்று அதன் வாய், கண்கள் மற்றும் காதுகள் முற்றிலும் உறைந்த நிலையில் காணப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இரண்டு பேர் அதைக் காப்பாற்ற வந்து பாதிக்கப்பட்ட மானுக்கு உதவினார்கள். வீடியோவின் காணப்படும் இடம் இன்னும் சரியாக தெரியவில்லை.

மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

Reddit தளத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இரண்டு மலையேறுபவர்கள், முகம் முற்றிலும் உறைந்த நிலையில் ஒரு மான் இருப்பதைக் கண்டனர். மான் பனிக்கு அடியில் உணவை தேட முயன்ற போது,  இதனால் அதன் முகம் பனியில் புதைந்ததாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் மான் அருகே சென்றபோது, ​​அது பயந்து ஓடியது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு, இரண்டு பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த விலங்கைப் பிடித்து அதன் முகத்தில் இருந்து பனியை அகற்றினர். அப்போது நிம்மதியடைந்த மான் மீண்டு குதித்து கொண்டு ஓடுவதைக் காணலாம். Reddit பயனர்கள், மானின் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினர். 

மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News