Viral Video: சமூக ஊடகங்களில் திருமண வீடியோக்கள் தற்போது படு வைரலாக பரவி வருகின்றன. பல திருமணங்களில் நடந்த வேடிக்கையான விஷயங்கள், மணமகன், மணமகள் ஆடும் நடனங்கள் என அனைத்து வீடியோக்களும் இணையதளத்தில் சக்கை போடு போட்டு வருகின்றன.
இதுபோன்ற ஒரு வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) தற்போது வைரலாகி வருகிறது. புதிதாக திருமணமான மணப்பெண் சினம் கொண்டு தனது கணவரின் வீட்டின் கூரையில் ஏறி விடுகிறார். எவ்வளவு அழைத்தும் அவர் கீழே இறங்க மறுப்பது போல் இந்த வீடியோ காட்சி உள்ளது.
மணமகள் (Bride) திருமணம் முடிந்து அப்போதுதான் தனது கணவரின் வீட்டிற்கு வந்திருப்பதை வீடியோ மூலம் உணர முடிகிறது. மணப்பெண் சிவப்பு நிற திருமண புடவையில் இருப்பது வீடியோவில் தெரிகிறது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உட்பட பலர் அவரை அவரது கணவர் வீட்டில் அழைக்க காத்திருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது.
இருப்பினும், அந்த மணப்பெண்ணை எந்த விஷயம் கோவமடையச் செய்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. கோபத்தில், அவர் ஒரு ஏணியை வைத்து, படிக்கட்டு இல்லாத அந்த வீட்டின் கூரையில் ஏறுகிறார். மணமகன் அவரைத் தடுக்க முயல்கிறார். ஆனால் மணப்பெண் பிடிவாதமாக மேலே ஏறுகிறார்.
மற்ற குடும்ப உறுப்பினர்களும் மணமகளை சமாதானப்படுத்தி அவரை கீழே வரும்படி கேட்கிறார்கள். ஆனால் அந்த பெண் யாருடைய பேச்சுக்கும் அசைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
ALSO READ: Viral Video: தன்னை மறந்து ஆடிய மணமகன், ஈடு கொடுத்து தூள் கிளப்பிய மணமகள்
மேலும், கோவத்தில், மணப்பெண் ஏணியையும் தள்ளி விடுகிறார். மாப்பிள்ளை உட்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அந்த மணப்பெண்ணை சமாதானம் செய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள்.
இந்த வீடியோ (Viral Video) இன்ஸ்டாகிராமில் நிரஞ்சன் மொஹபத்ரா என்ற பயனரின் கணக்கில் பதிவேற்றப்பட்டது.
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 5000 க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் இந்த வீடியோ நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பல பயனர்கள் மணமகளுக்கு அப்படி என்னதான் கோவம் என்பதை அறிய ஆர்வம் காட்டினர். மற்றவர்கள் நகைச்சுவையாக கமெண்ட் செக்ஷனில் ஈமோஜி மழை பொழிந்தனர்.
ALSO READ: Viral Video: டி வில்லியர்ஸ் அவுட்டானதும் விரக்தியான மகன்; க்யூட் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR