அரை பேண்ட் அணிந்தவருக்கு 'NO Entry' என்றதா SBI.. நடந்தது என்ன..!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கி அவரை உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பெரிதாக பேசப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 22, 2021, 01:19 PM IST
அரை பேண்ட் அணிந்தவருக்கு 'NO Entry' என்றதா SBI.. நடந்தது என்ன..!!!  title=

புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர் ஒருவர் அரை பேண்ட் எனப்படும் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், வங்கி அவரை உள்ளே அனுமதிக்காத விவகாரம் சமூக ஊடகங்களில், பெரிதாக பேசப்பட்டது. 

வாடிக்கையாளர் அனிந்திருந்த ஆடை 'கண்ணியமாக' இல்லாததால், அதன் கிளை ஒன்றில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்ட வாடிக்கையாளர், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எஸ்பிஐ டேக் செய்து, அவர் புகார் கூறினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆஷிஷ் என்ற பெயர் கொண்ட நபர், நவம்பர் 16 அன்று பதிவிட்ட ட்வீட்டில்  வங்கிக்கு வரும் போது, இதை தான் அணிய வேண்டும், இதை அணியக் கூடாது என டிரஸ் கோட் ஏதேனும் உள்ளதா என்று எஸ்பிஐயிடம்  கேட்டு ட்வீட் செய்தார்.

தனது  கணக்கை மூடுவதற்காக வங்கிக்குச் சென்றதாக கூறும், ஆஷிஷ் வங்கியின் பியூன் தனது உடையை பார்த்து,  அது கண்ணியமான உடை அல்ல என கூறி அனுமதி மறுத்துள்ளார்.  அப்போது  அவர் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது ட்வீட் பதிவிற்கு, பல பயனர்கள், இதே போன்ற நிலையை தாங்களும் எதிர்கொண்டதாக கூறி பதிலளித்தனர்.

அவரது ட்வீட் அனைவர் கவனத்தையும் ஈர்த்த நிலையில், SBI நவம்பர் 18 அன்று அவருக்கு கிளையின் விவரங்களைக் கேட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியது.

ஆஷிஷின் ட்வீட்டிற்கு பதிலளித்த SBI, “உங்கள் பிரச்சனையை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மதிக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு  எந்த விதமான ஆடைக் குறியீடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்துவோம். அவர்கள் தங்கள் விருப்பப்படி உடை அணியலாம் மற்றும் வங்கிக் கிளை போன்ற பொது இடங்களுக்கு உள்ளூரில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதிமுறைகள்/பாரம்பரியம்/கலாச்சாரத்தை கருத்தில் கொள்ளலாம். இந்தச் சிக்கலை நீங்கள் எதிர்கொண்ட கிளைக் குறியீடு/ பெயரைப் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

ALSO READ | Airtel மற்றும் Vi பிரமாண்டமான திட்டம், முழு விவரம் இதோ 

ஆஷிஷ் பின்னர் விவரங்களுடன் ட்வீட் பதிவிட்டதை தொடர்ந்து,  அவரது வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் வந்து  விளக்கம் அளித்து சமாதானம் செய்தனர்.

நவம்பர் 20 அன்று, ஆஷிஷ் ஒரு ட்வீட்டில், பிரச்சனையை தீர்க்க எஸ்பிஐ அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும்,  எனவே தனது புகாரை  திரும்ப பெற விரும்புவதாகவும், ஊழியர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்தார்.

 

ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News