யாராவது சைக்கிளை சிறிது அலங்கரித்து வைத்திருந்தாலே அண்ணாமலை சைக்கிள் என்று கூறும் அளவுக்கு, அண்ணாமலை படத்தில் ரஜினியின் சைக்கிள் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. அந்தத் திரைப்படம் வந்த காலத்தில் அவரைப்பார்த்து ஏராளமான ரசிகர்கள் தங்கள் சைக்கிளை பார்த்து பார்த்து அலங்கரித்து வைத்திருந்தனர்.
காலங்கள் கடந்த பிறகும் இப்போதும் டூவீலர் பிரியர்கள் தங்கள் வாகனத்தை அலங்கரித்து அழகு பார்க்கின்றனர். இதுபோல் பழைய காலத்து ஸ்கூட்டர் வைத்துள்ள ஒருவர், வண்ண வண்ண விளக்குகள் மினுமினுக்க ஒரு டிஸ்கோ டான்ஸ் அரங்கம் போலவே அசத்தலாக வடிவமைத்துள்ளார்.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த மஹிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மகேந்திரா டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ தற்போது நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பஜாஜ் சேட்டக் நிறுவனத்தின் ஸ்கூட்டர் அங்குலம் அங்குலமாக விளக்குகளால் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த விளக்குகள் சுப் ஜயே சாரே நசாரே என்ற ராஜேஷ் கண்ணாவின் இந்திப் பட பாடலுக்கு ஏற்ப பாடலை முணுமுணுப்பது போல மினு மினுக்க நடனம் ஆடிக்கொண்டிருந்தன.
மேலும் படிக்க | Viral News: இந்த நாட்டில் தங்கத்தை விட ஆணுறையின் விலை அதிகம்; விலை ரூ.60,000 மட்டுமே
அதோடு அந்த ஸ்கூட்டரின் முன்பகுதியில் ஹாண்டில் பாரில் இணைக்கப்பட்ட மொபைல் போன்ற கருவியில் அந்தப் பாடலின் வீடியோ காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
Life can be as colourful and entertaining as you want it to be… #OnlyInIndia pic.twitter.com/hAmmfye0Fo
— anand mahindra (@anandmahindra) June 17, 2022
ஆனந்த் மஹிந்திராவின் இந்த வீடியோவுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன. ஏராளமானோர் ரீட்வீட் செய்தும், கமெண்ட்களில் பாராட்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR