'கழுகு-2' திரைப்படத்தின் 'சகலகலா வள்ளி' பாடல் வெளியானது!

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் உருவாகியுள்ள கழுகு-2 திரைப்படத்தில் இடம்பெறுள்ள சகலகலா வள்ளி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Jan 12, 2019, 11:59 AM IST
'கழுகு-2' திரைப்படத்தின் 'சகலகலா வள்ளி' பாடல் வெளியானது! title=

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் உருவாகியுள்ள கழுகு-2 திரைப்படத்தில் இடம்பெறுள்ள சகலகலா வள்ளி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கழுகு' இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் 'கழுகு-2' என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.

கிருஷ்ணா, பிந்து மாதவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பாரக்கப்படும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா வள்ளி என்னும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பாடல் ஆசிரியர் மோகன்ராஜா இப்பாடலுக்கு பாடல் வரிகளை எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். குரு அயன் துரை, சுவி சுரேஷ் இப்பாடலை பாடியுள்ளனர்.

அண்டை மாநில முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்க, அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் என்னும் கருவை மையப்படுத்தி திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படதிற்கு தணிக்கைக் குழுவில் U சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Trending News