பிரதமர் மோடிக்கு முத்தம் அளித்த பெண்; வைரலாகும் Video!

பிரதமர் மோடியின் உருவ படத்திற்கு வடமாநில பெண் ஒருவர் முத்தம் அளிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Last Updated : Feb 28, 2019, 11:29 AM IST
பிரதமர் மோடிக்கு முத்தம் அளித்த பெண்; வைரலாகும் Video! title=

பிரதமர் மோடியின் உருவ படத்திற்கு வடமாநில பெண் ஒருவர் முத்தம் அளிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்ற சூழ்நிலைகளுக்கு இடையில், இந்திய பிரதமர் மோடியின் உருவ படத்திற்கு வடமாநில பெண் ஒருவர் முத்தம் அளிக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் பிரபலமானவர் என்பதில் ஐயம் இல்லை. இதனை நிரூபிக்கும் வகையில் சிலர் தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சியில் கூட மோடியை முன்வைத்து பேசுவதை நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் சமீபத்தில் சூரத்தை சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் வீட்டு திருமண பத்திரிக்கையில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என அச்சிட்டு வழங்கினர். இதேப்போல் சில அங்காடிகள் தங்களது பிரசூரங்களில் பிரதமர் மோடியின் வாக்கியங்களை அச்சிட்டும் வழங்கி வருகின்றனர்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக, பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கருப்பு கொடி காட்டப்பட்டு வந்தாலும் வட மாநிலங்களை பொறுத்தமட்டில் மோடிக்கான ஆதரவு குறையவில்லை என்றே கூறலாம். இதனை உறுதி படுத்தும் விதமாகவே தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Trending News