Belfast: கொரோனா காலத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், நமக்கு மட்டுமில்லை, நம்மை சுற்றி இருப்பபவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம். அப்படி ஒரு சம்பவம் தான் பெல்ஃபாஸ்ட்டில் நடந்துள்ளது. விமானப் பயணத்தின் போது முகமூடி (Wear Masks) அணிய மறுத்த ஒரு பெண்ணின் நடவடிக்கை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், விமானத்தில் இருந்த ஒரு பயணிக்கு அருகில் சென்று தும்பவமும் செய்தார். அந்த பெண்ணின் செயல், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்தது.
பெல்ஃபாஸ்ட் சம்பவம்:
இந்த சம்பவம் வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டில் நடந்துள்ளது. பெல்ஃபாஸ்ட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Belfast International Airport) எடின்பர்க் செல்லும் விமானத்தில் அந்தப் பெண் அமர்ந்திருந்தார். அப்பொழுது அவரிடம் முகமூடி அணியுமாறு அறிவுறுத்தப்பட்டவுடன் அவர் மிகவும் கோபமடைந்தார். மேலும் சக பயணிகளை கடுமையாக சாடினார். இந்த சம்பவத்தை ஒரு பயணி தனது தொலைபேசியில் பதிவு செய்தார்.
ALSO READ | இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!
வைரல் வீடியோவை காண்க:
இந்த பெண் ஈஸிஜெட் விமானத்தில் பயணம் செய்யவிருந்தார். ஆனால் விமானத்திலிருந்து அவரை கீழே இறங்க சொன்னப்போது, ஊழியர்களை தரக்குறைவாக பேசினார். "எல்லோரும் இறந்துவிடுவார்கள், உங்களுக்குத் தெரியும் தானே" (Everyone will die, you know) என்று அந்தப் பெண் சத்தமாகக் கத்திக் கொண்டே இருந்தாள்.
An Easyjet passenger is thrown off the Belfast to Edinburgh flight this afternoon after she refused to wear a face covering pic.twitter.com/YwRLNBK8aA
— stephen (@LFC_blano) October 18, 2020
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR