பூனை மீது பாசத்தை பொழியும் குரங்கு: இணையவாசிகளை நெகிழ்ந்து அழ வைத்த வைரல் வீடியோ

Funny Animal Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்கள் சில மிக சுவாரஸ்யமாகவும் சில சமயம் வித்தியாசமாகவும் இருக்கின்றன. தற்போது அதே போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 12:18 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் Buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
பூனை மீது பாசத்தை பொழியும் குரங்கு: இணையவாசிகளை நெகிழ்ந்து அழ வைத்த வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மனிதர்களாகிய நாம் பொதுவாக செல்லப்பிராணிகளின் உணர்வுகளையும் நடத்தைகளையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் காட்டில் உள்ள விலங்குகள் மற்றும் கடலில் உள்ள நீர்வாழ் விலங்குகளின் நடத்தையை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் செல்லப்பிராணிகளுடன் நாம் அதிக நேரத்தை செலவிடுகிறோம். சில சமயம் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் சில நடவடிக்கைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இப்படி கூட நடக்குமா என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்கள் சில மிக சுவாரஸ்யமாகவும் சில சமயம் வித்தியாசமாகவும் இருக்கின்றன. தற்போது அதே போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

குரங்கு வைரல் வீடியோ

குரங்கு பல வித சேட்டைகளை செய்யும், குறும்புகள் செய்யும் விலங்காக அறியப்படுகிறது. இது மனிதர்களையும் பாடாய் படுத்துகின்றது. குரங்குகள் மனிதனாக இருந்தாலும் சரி மிருகமாக இருந்தாலும் சரி யாரையும் விடுவதில்லை. குரங்குகளில் அட்டகசம் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்திலும் காணக்கிடைக்கின்றன. ஆனால் தற்போது பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ மிகவும் வித்தியாசமாக உள்ளது. 

மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ

பூனையை கொஞ்சி தீர்க்கும் குரங்கு

இந்த வீடியோவில் ஒரு பூனையையும் குரங்கையும் காண முடிகின்றது. பூனை மீது குரங்குக்கு பாசம் பொங்கி வழிகிறது. அது பூனையை தொட்டு தொட்டு அன்பை பொழிகிறது. பாசமாக தடவிக்கொடுக்கிறது. பூனை வேறு ஒரு பக்கம் பார்க்கவே அது அதனை திருப்பி தன் பக்கம் பார்க்கச்செய்கிறது. குரங்கின் பாசத்தால் நெகிழ்ந்த பூனைகுட்டி அதன் அருகில் சென்று அதனை கட்டிக்கொண்டு அதன் மடியில் படுத்துக்கொள்கிறது. இதனால் குரங்கு மிகவும் மகிழ்கிறது. அது பூனைகுட்டியை வாரி அணைத்துக் கொள்கிறது. இதை பார்க்க மிக நெகிழ்ச்சியாக உள்ளது.

நெஞ்சை நெகிழ வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் Buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் (Netizens) இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பூனை மற்றும் குரங்கின் கியூட் நடவடிக்கைகளையும், பூனை மீது குரங்கு காட்டும் அபரிமிதமான பாசத்தையும் இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோ கண்கலங்க வைத்ததாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News