பார்க்கிங்குக்கு இடம் இல்லனாலும் இப்படியா!! மரத்தில் பார்க் செய்யப்பட்ட கார், வைரல் வீடியோ

Unbelievable Video: சமீபத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் கண்டிப்பாக நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 22, 2023, 05:01 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் singer_mangilal_dewasi என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு பல லட்சம் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
பார்க்கிங்குக்கு இடம் இல்லனாலும் இப்படியா!! மரத்தில் பார்க் செய்யப்பட்ட கார், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் அபூர்வமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் பல வித வினோதங்களை நாம் பார்க்கிறோம். பல சமயங்களில் இங்கு காணப்படும் வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. சில விடியோக்களை பார்த்தால் இப்படி எப்படி நடக்கும் என நம்ப முடியாமல் இருக்கின்றது. ஆனால், கண் முன்னால் ஓடும் வீடியோ நம்மை நம்பச்சொல்கிறது.

சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் கண்டிப்பாக நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. இதை பார்த்தவுடன் நம் மனதில் ஆயிரம் கேள்விகள் எழும். இது எப்படி சாத்தியம் ஆகும் என நம் மனம் வினாக்களை தொடுக்கும். இணையவாசிகளும் இந்த வீடியோ பற்றி பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். 

இதை யாராவது சொல்லக்கேட்டால் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள். ஆனால், ஆதாரமாக இந்த வீடியோவை காட்டினால் நம்பித்தான் ஆக வேண்டும்.

மரத்தின் உச்சியில் கார்.. அங்கு சென்றது எப்படி? 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் கார் ஒன்று தெரிவதை காணலாம். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த கார் ஒரு மரத்தின் மீது நிற்கிறது. வீடியோவைப் பார்க்கும்போது, ​​கார் மரத்தின் மேல் நிறுத்தப்பட்டிருப்பது போல் தெரிகிறது. இருப்பினும், வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்த்தால், கார் மரக்கிளைகளால் கட்டப்பட்டிருப்பது தெரிய வரும். ஆனால் முதல் பார்வையில் கார் பக்காவாக மரத்தின் மீது நிற்பதை போலவே தெரிகின்றது. அங்கே அந்த காரை யார் கொண்டு நிறுத்தி இருப்பார்கள்? மரத்தின் கிளை காரின் எடையை எப்படி தாங்குகிறது? இப்படி பல கேள்விகள் நமக்கு முதலில் எழுகின்றன. பின்னர், வீடியோவை உற்று கவனித்தால்தான் கார் மரக்கிளையோடு கட்டப்பட்டு இருப்பதை கண்டுபிடிக்க முடிகின்றது. 

மேலும் படிக்க | காலக் கொடுமைடா சாமி... பெரிய கருநாகத்தை நூடுல்ஸ் போல் சாப்பிடும் கொக்கு!

கண்களுக்கு சவால் விடும் அந்த வீடியொவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

(@singer_mangilal_dewasi)

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் singer_mangilal_dewasi என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பல லட்சம் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

' இது மிகவும் பழைய மாடல் கார்' என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். ' இந்த காரின் பெயர் ஓப்பல் அஸ்ட்ரா. இந்த காரை ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது. பின்னர் அதன் நிறுவனம் மூடப்பட்டது. மக்கள் அதன் மேக்ஸ் உதிரி பாகங்களைப் பெறுவதை நிறுத்தினர்' என மற்றொரு பயனர் விளக்கம் அளித்துள்ளார். 'யாருடைய இந்த பழைய மாடல் காரோ பழுதாகிவிட்டது. அவர் இந்த பழைய காரை மரத்தில் தொங்கவிட்டு வீடியோ எடுத்துள்ளார். அதுதான் கதை. வேறொன்றுமில்லை.' என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். 

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | அபூர்வ பாம்பை ஓடிப்போய் பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News