மணமகள் தனது திருமணத்தில் ஊர்வலமாக வர விரும்பி அதை செயல்படுத்தினார். வழக்கமாக திருமண அழைப்பின்போது, மாப்பிள்ளை தான், காரில் ஊர்வலமாக வருவார்.
ஆனால், புதுமையாக, மணப்பெண் காரில் அல்ல, ஜீப்பில் ஊர்வலம் வந்தது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல, திரைப்படங்களில் காண்பிப்பதைப் போல, பெண் ஜீப்பின் பானட்டில் நின்று, திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்.
ஸ்டீரியோடைப் பழக்கத்தை மாற்றி, மணப்பெண் காரில் வலம் வந்து, நடனமாடுகிறார்.
அதுமட்டுமல்ல, மணமகள் திறந்த ஜீப்பின் பானட்டில் ஏறி நடனமாடிக் கொண்டே மாப்பிள்ளையை அழைத்துச் செல்வதற்காக புகுந்த வீட்டிற்கு செல்கிறார்.
இந்த வீடியோ, பிரைட் ரைட் என்ற பெயரில் வைரலாகிறது.
लड़की हूं लड़ सकती हूं - जब लड़कों की बारात निकल सकती है तो भोपाल के बैरागढ़ की भावना क्यों पीछे रहें,खुद की बारात में किया शानदार डांस pic.twitter.com/d07pct7lxN
— Satya Vijay Singh (@SatyaVijaySin20) January 31, 2022
புதுமையான மற்றும் வித்தியாசமான மணப்பெண்ணின் ஊர்வலத்தை பார்த்து பலரும் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
இந்த மணமகள் ஊர்வலம் பற்றி சமூக ஊடகங்களில் (Social Media) மிகப்பெரிய விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. மணமகள் ஊர்வலம் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ | தாய் யானையிடம் பால் குடித்த 3 வயது சிறுமி- வீடியோ வைரல்
ஸ்வாக் மணப்பெண்
வைரலான வீடியோவில், மணப்பெண் திறந்த ஜீப்பில் ஊர்வலம் செல்வதைக் காணலாம். இந்த ஊர்வலத்தில், டிஜே பின்னணியில் ஒலிக்க, கல்யாணப் பெண் டான்ஸ் ஆடுகிறார்.
வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப வல்லுநரான பவ்னா லால்வானியின் இந்த மணப்பெண் ஊர்வலத்தை, அந்த வழியே செல்லும் அனைவரும் சில கணங்கள் நின்று, பார்த்து, ரசித்தே செல்கின்றனர்.
மணமகளின் இந்த ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களும் காரில் இருந்துள்ளனர். தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு மணப்பெண் பாவனா முன்வைத்த கண்டிஷனே மணப்பெண் ஊர்வலம் இருந்தால் தான் கல்யாணம் என்பதுதானாம்.
இறுதியில் மணப்பெண் பாவனாவின் பிடிவாதம் வென்றது. இதைத் தொடர்ந்து, பாவனா திறந்த ஜிப்சியில் சவாரி செய்து திருமணம் செய்துக் கொண்டார்.
ALSO READ | வைரலான வீடியோவால் ஜெயிலுக்கு சென்ற அட்ராசிட்டி தாத்தா
மகளின் விருப்பத்தை நிறைவேற்றிய தந்தை
மகளின் ஆசையை நிறைவேற்ற மணமகளின் ஊர்வலம் நடத்திய தந்தை உணர்ச்சிப் பெருக்குடன் இருந்தார். முதலில் இப்படி ஊர்வலம் செல்வதற்கு மணமகளின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை.
வழக்கத்தை மாற்றினால், ஊர் உலகம் என்ன சொல்லும் என்ற அவரது தயக்கத்தை மகளின் பிடிவாதமே மாற்றியது. மகளின் வற்புறுத்தலுக்கு முன்னால் தந்தை தலைவணங்க வேண்டியிருந்தது.
இறுதியில் மணமகளின் விருப்பப்படி, திருமண அழைப்பு ஊர்வலம் ஜோராக நடைபெற்றது. வைரலாகும் இந்த திருமண அழைப்பு வீடியோவைப் பற்றியே ஊர் முழுவதும் பேச்சாக இருக்கிறதாம்!
ALSO READ | பானிபூரியில் சட்னி, ஐஸ்கிரீம் ஊற்றி சாப்பிடும் வைரல் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR