குழிக்குள் விழுந்து நாயை காப்பாற்றிய வீரர்: புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள், வைரல் வீடியோ

Dog Rescue Viral Video: உக்ரேனிய வீரர் ஒருவர் குழிக்குள் நுழைந்து நாயை மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2022, 05:53 PM IST
குழிக்குள் விழுந்து நாயை காப்பாற்றிய வீரர்: புகழ்ந்து தள்ளும் இணையவாசிகள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான உறவு பற்றிய பல வீடியோக்களையும் நாம் சமூக ஊடகங்களில் கண்டுள்ளோம். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில், மக்களைப் போலவே பல விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. விலங்குகளும் ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. அப்போது இவற்றுக்கும் மீட்கப்படுவதற்கு உதவி தேவைப்படுகின்றது. உக்ரைனில் அவசரகால அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெடிகுண்டு வீசப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து பூனைகள் மற்றும் நாய்களைக் காப்பாற்றும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்திருக்கிறோம். மிகவும் ஆழமான குழிக்குள் விழுந்த ஒரு சிறிய நாயை உக்ரேனிய வீரர்கள் காப்பாற்றிய மற்றொரு மனதைக் கவரும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "எங்கள் பாதுகாவலர்கள் ஒரு நாயை மீட்டனர்," என்று அவர் தலைப்பில் எழுதியுள்ளார். இந்த வீடியோ முதலில் டிக்டோக்கில் ‘@pavyk9525’ என்ற பயனரால் வெளியிடப்பட்டது.

உக்ரேனிய சிப்பாய்கள் சிலர் மற்றொரு சிப்பாயை தலைகீழாக குழிக்குள் தொங்கவிட்டு, அவரது கால்களை பிடித்துக் கொண்டு குழிக்குள் இறங்க உதவுவதை வீடியோவில் காண முடிகின்றது. சில வினாடிகளுக்குப் பிறகு, சிப்பாயின் தோழர்கள் அவரை வெளியே இழுப்பதைக் காண்கிறோம். குழிக்குள் சென்ற சிப்பயின் கைகளில் ஒரு சிறிய நாய்க்குட்டி இருப்பதைக் காண முடிகின்றது. இந்த வீடியோ 52,000 வியூஸ்களையும் 5,800 லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | 'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 

ஆழமான குழியில் இருந்து உக்ரேனிய சிப்பாய் நாயை மீட்கும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

கடந்த சில மாதங்களில், ரஷ்யாவால் முன்னர் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்குள் உக்ரைன் ஒரு நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் விளைவாக கர்சன் பகுதியில் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ளுமாறு ரஷ்ய படைகளுக்கு கிரெம்ளின் உத்தரவிட்டது. உக்ரேனியப் படைகளுக்கு கெர்சனின் விடுதலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இது தொடர்ச்சியான வாக்கெடுப்புகளைத் தொடர்ந்து ரஷ்யாவால் இணைக்கப்பட்டது. 

எனினும், தொடர்ச்சியான சண்டை மற்றும் உக்ரைனின் மின் கட்டமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது இலக்கு வைத்து ரஷ்யா செய்த தாக்குதல் காரணமாக கியேவ் மற்றும் பல பிராந்தியங்களில் உள்ள மக்கள் மின்சாரம் இல்லாமல் கடுமையான குளிர்காலத்தை எதிர்கொண்டுள்ளனர் என்பது வேதனையான உண்மையாகும். 

மேலும் படிக்க | நோயாளியாக வந்த பேய், அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News