எமனுக்கு அல்வா கொடுத்து அசால்டாய் தப்பித்த அப்பாடக்கர்: திகிலூட்டும் வைரல் வீடியோ

Unbelievable Viral Video: சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்தால் நமக்கு ஆச்சரியமும் பீதியும் ஒன்று சேர ஏற்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2023, 03:57 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @RestrictedVids என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
எமனுக்கு அல்வா கொடுத்து அசால்டாய் தப்பித்த அப்பாடக்கர்: திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையே சில நொடிகள் வித்தியாசம்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக பல பயங்கரமான விபத்துகளில் சிலர் சில நொடிகளில் மரணத்தை வென்று விடுவதை நாம் பார்த்துள்ளோம். இதை காட்டும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவை நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 

அப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ சமீபத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது. இதில் சில நொடிகளில் ஒருவர் உயிர் பிழைக்கிறார். மிகவும் அதிர்ஷ்டவசமாக அவர் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து விடுகிறார்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ -வை பார்த்தால் நமக்கு ஆச்சரியமும் பீதியும் ஒன்று சேர ஏற்படுகின்றன. இதில் மேம்பாலம் அருகே ஒருவர் சைக்கிளில் செல்வதை காண முடிகின்றது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மேலே இருந்து செல்லும் ஒரு டிரக் கீழே விழுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்த்தால் நம் குலை நடுங்கும். 

மேலும் படிக்க | Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்!

மேம்பாலத்தில் இருந்து விழுந்த லாரி 

மேம்பாலம் வழியாக ஒருவர் சைக்கிளை மிதித்துக்கொண்டு செல்வதை வீடியோவின் துவக்கத்தில் காண முடிகின்றது. அவர் கடந்து செல்லும் மேம்பாலத்தின் மேலிருந்து ஒரு வாகனம் கீழே விழப்போவதை அறியாத அவர் அமைதியாக சென்றுகொண்டிருக்கிறார். அவர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு முன்னோக்கி செல்லும் போது அவருக்கு முன்னால் ஒரு டிரக் வருகிறது. சைக்கிளில் செல்லும் நபர் அந்த டிரக்கின் மீது மோதாமல் தப்பித்து வேறு பக்கம் நகர்ந்து செல்கிறார். 

ஆனால், சரியாக அந்த நேரத்தில்தான், மேம்பாலத்தின் மீது செல்லும் டிரக் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுகிறது. ஆனால், அந்த சக்கிள் ஆசாமி அதிர்ஷ்டசாலி. அவரது எதிரே வந்த லாரி அவரைக் கடந்து சென்றதும், மேலே இருந்து மற்றொரு லாரி கீழே விழுந்ததும், அதன் சத்தம் கேட்டு சைக்கிளை விட்டுவிட்டு அவர் சாலையின் மறுபக்கம் ஓடி விடுகிறார். அவர் மிக  வேகமாக சைக்கிளை விட்டு அந்த இடத்திலிருந்து ஓடுகிறார். தனது வேகத்தின் காரணமாக மேலிருந்து விழுந்த டிரக்கின் கீழ் அகப்படாமல் தப்பித்து விடுகிறார். 

 அவரது உயிரும் காப்பாற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் ஓடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்த லாரியின் ஒரு சக்கரமும் அவர் அருகே விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் அந்த சக்கரத்திலும் அகப்படவில்லை. அப்படி அதன் அடியில் வந்திருந்தாலும் அவருக்கு ஆபத்தாகி இருக்கலாம். 

மனதை பதபதைக்க வைக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில்  @grayeb_latayef என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அனைவருக்கும் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமே மேலோங்குகிறது. 

மேலும் படிக்க | செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News