மணப்பெண் தங்கையின் நடனம், ஷாக்கான குடும்பத்தினர்: வீடியோ வைரல்

Bride Sister Dance: இந்த வீடியோவில் மணமகளின் சகோதரி தனது நடனத்தால் மேடையை அதிரவைப்பதைக் காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 30, 2022, 03:05 PM IST
  • அட்டகாசமாக நடனம் போட்ட மணமகள் தங்ககை.
  • திருமணத்தில் தூள் கிளப்பி இணையத்தில் வைரல் ஆனார்.
  • வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன.
மணப்பெண் தங்கையின் நடனம், ஷாக்கான குடும்பத்தினர்: வீடியோ வைரல் title=

மணப்பெண் தங்கையின் வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த வீடியோவில், மணமகளின் சகோதரி தனியாக ஓட்டுமொத்த கூட்டத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் மேடையிலும், ‘ராஞ்சனா’ (தமிழில் அம்பிகாபதி பாடல்) பாடலிலும் அற்புதமான நடனம் ஆடுவதை வீடியோவில் காணலாம். மற்றொரு இடத்தில் அவரது சகோதரி உணர்ச்சிவசப்படுவதையும் இந்த வீடியோவில் நாம் காணலாம். 

மேலும் படிக்க | துரத்திய காளைகள், நம்ப முடியாத வகையில் தப்பித்த நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ 

திருமணம் தொடர்பான இந்த வீடியோவில் மணப்பெண்ணின் சகோதரி நடனம் ஆட மேடைக்கு வருவது எப்படி என்பதை பார்க்கலாம். மணமகள் உட்பட அவரது உறவினர்கள் அனைவரும் பார்வையாளர் கேலரியில் அமர்ந்துள்ளனர். அப்போது 'ராஞ்சனா' படத்தின் பாடல் ஒலிக்கத் தொடங்க, மணப்பெண்ணின் தங்கை நடனமாடத் தொடங்குகிறார். நடனத்துடன், அவளது முகபாவமும் அனைவரையும் கவர்ந்தது. 

வீடியோவை இங்கே காணுங்கள்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த நடன வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான முதல் பெருமளவில் வைரலாகி வருகின்றது, மேலும் இதற்கு இதுவரை மில்லியன் கணக்கான வியூஸ்களும், லைக்குகளும் கிடைத்துள்ளன. கமெண்ட் செக்‌ஷனில் பல ஹார்ட் எமோஜிகளும் ஃபையர் எமோஜிகளும் நிரம்பியுள்ளன. 

தற்போது இந்த வீடியோ mumbaidancersandindiandanceinstitute என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நெட்டிசன்களும் பலவித கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.

 

மேலும் படிக்க | நாங்களும் வாசிப்போம்ல, டிரம்ஸ் வாசிக்கும் யானை: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News