தாயை பயமுறுத்தும் வெள்ளை புலிக்குட்டியின் குறும்பு! வைரலாகும் வீடியோ!

வெள்ளை புலிக்குட்டி ஒன்று மறைந்து இருந்து தனது தாயை பயமுறுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 17, 2022, 04:07 PM IST
  • தாயிடம் விளையாடும் புலிக்குட்டி
  • பதுங்கி இருந்து விளையாடிய குட்டி புலி
  • இணையத்தில் செமயாக வைரல் ஆனது
தாயை பயமுறுத்தும் வெள்ளை புலிக்குட்டியின் குறும்பு!  வைரலாகும் வீடியோ! title=

இணையத்தில் விலங்குகளின் குறும்பு வீடியோக்கள் விரைவில் கவனத்தை ஈர்த்து விடுகிறது.  அதிலும் பார்த்தாலே பயத்தை வரவைக்கும் புலிகள் குறும்புத்தனமான செயலை செய்தால் பார்ப்பதற்கே எவ்வளவு அழகாக இருக்கும்.  அதுபோன்று ஒரு புலிக்குட்டியின் செயல் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.  வெள்ளை நிற புலிக்குட்டி ஒன்று தனது தாயிடம் பதுங்கி செல்லும் இந்த காட்சி ட்விட்டரில் Yoda4ever என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: சிங்கிளாக வந்த சிங்கம்; வேட்டையாடியதா; விட்டுச்சென்றதா!

தற்போது வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், வெள்ளைப் புலி குட்டி ஒன்று கதவிற்கு பின்புறம் மறைந்து இருந்து வெளியே படுத்திருக்கும் அதன் தாயை பயமுறுத்த எண்ணி, அதன் தாயை நோக்கி திருட்டுத்தனமாக நகர்ந்து அருகில் வந்து சத்தமாக உறுமுகிறது, இந்த சத்தத்தை கேட்ட தாய் புலி அதிர்ச்சியடைந்து துள்ளி குதிக்கிறது.  இந்த காட்சி பார்ப்பவர்களை ரசிக்க செய்துள்ளது.  அந்த வீடியோவுடன் "புலிக்குட்டி பதுங்கிச் சென்று அதன் தாயை பயமுறுத்துகிறது" என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டு இருக்கிறது.

 

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பலவிதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  தாய் புலி அதன் குட்டிக்கு வேட்டையாடும் திறனை ஏற்படுத்த முயற்சிக்கிறது என்றும்,  "இது ஒரு நல்ல தாய், தனது குட்டியின் வேட்டையாடும் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டே அந்த தாய் புலி பயந்தது போல் துள்ளுகிறது என்று கூறியுள்ளார்.  இதுவரையில் இந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.  பொதுவாக வெள்ளைப்புலிகள் அரியவகை மரபணுக்களை கொண்டுள்ளது, இவற்றை நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.  தற்போது சில மிருகக்காட்சி சாலைகளில் இந்த அரியவகை வெள்ளை நிற புலிகளை வளர்த்து வருகின்றனர்.

 

 

மேலும் படிக்கவும் | பதட்டத்தின் உச்சக்கட்டம்: நாகப்பாம்பிடம் சிக்கிய பாம்பு...உயிர் பிழைக்குமா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News