தஞ்சை மாணவர் வடிவமைத்த செயற்கைக்கோள்களை NASA விண்ணில் செலுத்தும்

போட்டி வெற்றிகரமாக முடிந்தபின், ரியாஸ்தீன் இரண்டு வெவ்வேறு பணித்திட்டங்களின் கீழ் இரண்டு ஃபெம்டோ செயற்கைக்கோள்களுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 29, 2020, 01:43 PM IST
  • தஞ்சாவூர் மாணவரின் செயற்கைக்கோள்களை NASA விண்ணில் செலுத்தும்.
  • ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் தஞ்சை மாணவர் தெர்வு.
  • அடுத்த ஆண்டு இவரது வடிவமைப்புகள் விண்ணில் செலுத்தப்படும்.
தஞ்சை மாணவர் வடிவமைத்த செயற்கைக்கோள்களை NASA விண்ணில் செலுத்தும் title=

திருச்சி: நாசா 2021 ஜூன் மாதம் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர் வடிவமைத்த இரண்டு இலகுவான ஃபெம்டோ செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்.

தஞ்சாவூரின் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மெகாட்ரானிக்ஸ் பயின்று வரும் தஞ்சாவூரின் (Thanjavur) கரந்தாயைச் சேர்ந்த எஸ். ரியாஸ்தீன், க்யூப்ஸ் இன் ஸ்பேஸ் என்ற உலகளாவிய போட்டியில் கலந்துகொண்டார்.

இந்த போட்டி idoodleEduinc ஆல் நடத்தப்பட்டது. 11 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் இதில் பங்குகொண்டு NASA சௌண்டிங் ராக்கெட் மற்றும் பூஜ்ஜிய-அழுத்தம் கொண்ட அறிவியல் பலூனில் அனுப்புவதற்கான ஆய்வுகளை வடிவமைத்து சமர்பிக்க வேண்டும் என்று இந்த போட்டியில் கூறப்பட்டிருந்தது.

போட்டி வெற்றிகரமாக முடிந்தபின், ரியாஸ்தீன் இரண்டு வெவ்வேறு பணித்திட்டங்களின் கீழ் இரண்டு ஃபெம்டோ செயற்கைக்கோள்களுக்கு (Satellite) தேர்வு செய்யப்பட்டார். 73 நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலரில் ஒருவராக இருந்தார்.

ரியாஸ்தீனுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Panneerselvam) அவர்கள் தன் வாழ்த்துகளை ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

"செயற்கைக்கோள்களுக்கு VISON SAT v1 மற்றும் v2 என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் 37 மிமீ அளவு கொண்டவை. இதன் பேலோட் 30 மிமீ அளவு கொண்டது. இதன் எடை 33 கிராம் ஆகும். இப்படிப்பட்ட அபார அளவுகள் மற்றும் எடையைக் கொண்டுள்ளதால், இது உலகின் மிக இலகுவான ஃபெம்டோ செயற்கைக்கோள்களாக மாறியுள்ளது" என்று ரியாஸ்தீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ALSO READ: 3 தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட Nano Satellite-ஐ செலுத்தவுள்ளது NASA

3D பிரிண்டிங்கின் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு செயற்கைக்கோள்களும் பாலிதெரைமைடு தெர்மோபிளாஸ்டிக் பிசின்களால் புனையப்பட்டவை என்று அவர் கூறினார். V1 பாலிதெரைமைடு அல்டெம் 9085 ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 11 சென்சார்கள் மூலம் 11 அளவுருக்களைப் பதிவுசெய்யும். மேலும் இந்த செயற்கைக்கோள் NASA சவுண்டிங் ராக்கெட்டில் SR7 மிஷனின் கீழ் அமெரிக்காவின் (America) வர்ஜீனியா, வாலோப்ஸ் விமான தளத்திலிருந்து ஜூன் 2021 இல் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

V2 செயற்கைக்கோள் பாலிதெரைமைடு அல்டெம்ல்டெம் 1010 ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 11 சென்சார்கள் 17 அளவுருக்களைப் பதிவு செய்யும். ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் RB6 மிஷனின் கீழ் இந்த செயற்கைக்கோள் NASA ஸீரோ பிரஷர் ரிசர்ச் பலூனில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சி பணியில் தனது பள்ளி இறுதி ஆண்டு முதல் ஈடுபட்டுள்ளதாக ரியாஸ்தீன் கூறினார்.

ALSO READ: COVID-19 போரில் பங்குகொள்ள வருகிறது COORO Robot!! தமிழக மாணவர்கள் சாதனை!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News