சைக்கிள் ரைடில் மண்ணை கவ்விய தேஜ் பிரதாப் யாதவ் -Watch!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்திய சைக்கில் பேரணியில் மண்ணை கவ்விய தேஜ் பிரதாப் யாதவ்! 

Last Updated : Jul 26, 2018, 04:10 PM IST
சைக்கிள் ரைடில் மண்ணை கவ்விய தேஜ் பிரதாப் யாதவ் -Watch!  title=

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடத்திய சைக்கில் பேரணியில் மண்ணை கவ்விய தேஜ் பிரதாப் யாதவ்! 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் லாலு பிரசாத்தின் இளைய மகன் தேஜ் பிரதாப் யாதவ் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில், வேகமாக சைக்கிள் ஓட்டி வந்த தேஜ் பிரதாப் யாதவ், ஒரு ரவுண்டானாவில் திரும்பும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஓடி வந்து அவருக்கு உதவி செய்தனர். அதேசமயம், அப்பகுதியில் இருந்த சிலர் தங்கள் செல்போன்களில் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான உறவை முறித்துக்கொள்வதற்கு முன்பு, அவரது அமைச்சரவையில் தேஜ் பிரதாப் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

Trending News