தமிழிலும் வெளியாகிறது சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு!!

சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்று படம் தமிழிலும் வெளியாக இருக்கிறதாம் -தமிழில் ட்விட் செய்து அசத்திய சன்னி!!

Written by - Devaki J | Last Updated : Jul 20, 2018, 07:09 PM IST
தமிழிலும் வெளியாகிறது சன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு!!  title=

சன்னிலியோனின் வாழ்க்கை வரலாற்று படம் தமிழிலும் வெளியாக இருக்கிறதாம் -தமிழில் ட்விட் செய்து அசத்திய சன்னி!!

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.

பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்ப உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்'-னின் வாழ்க்கை வரலாற்று தொடர் வெளியானது. 

இந்த ஹிந்தியில் வாழ்க்கை வரலற்றுத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதையடுத்து, நடிகை சன்னிலியோன் தனது ட்விட்டர் பாகத்தில், தமிழ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், அவர் "அனைவருக்கும் வனக்கம்..தமிழ் உட்பட பல மொழிகளில் என் கதை சொல்லப்படுகிறது என்று நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.  

சன்னிலியோனின் வாழ்க்கை படமான 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' தமிழ் உட்பட பிறமொழிகளிலும் வெளிவருவதாக இவர் தெரிவித்துள்ளார். சன்னிலியோன்-னின் திரைப்படம் தமிழ் மட்டும் இல்லை எந்த மொழியில் வந்தாலும் அவரின் ரசிகர்களுக்கு விருந்துதான்..! 

 

Trending News