Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா?

Jaguar Hunt Video: முதலையை வேட்டையாடும் காட்டு விலங்கின் அதிரடி தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 4, 2023, 01:24 PM IST
  • என்னப்பா இப்படி செய்யறீங்களே! அதிர்ந்து உறைந்து போன காட்டு விலங்கு
  • இது ஜாகுவார் வேட்டை வீடியோ
  • முதலை வேட்டையாடும் காட்டு விலங்கின் வீரிய வீடியோ
Animal Video: ஜாகுவாரின் வேட்டையைப் பார்த்து அதிர்ந்து போய் நிற்பது யார் தெரியுமா? title=

வைரலாகும் வேட்டை வீடியோ:  சமூக ஊடகங்கள் நம் தினசரி வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன. தனி உலகமாக இயங்கி வரும் இணைய உலகில், பல வினோதமான விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியாகும் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதில், மிருகங்களின் வேட்டை வீடியோ பார்ப்பவரை பதற வைக்கிறது என்றால், அதிரடித் தாக்குதலை பார்த்து, கண்கள் பிதுங்கி பார்க்கும் விலங்கின் பயத்தையும் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | ‘மாமா.. என்ன ஏமாத்திட்டீங்களே!’: திருமணத்தில் வந்த காதலி, முழித்த மணமகன், வைரல் வீடியோ

வைரலாகி வரும் இந்த வீடியோவில் முதலையை வேட்டையாடும் ஜாகுவாரின் சக்தியும், ஒரே அடியில் துவண்டு போன முதலையின் பரிதாப நிலையையும் பார்க்கலாம். வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

காட்டிற்கு ராஜா என சிங்கத்தை சொன்னாலும் சிங்கத்தையே தாக்கும் விலங்குகளும் உண்டு. வனவிலங்குகளுக்கு இடையே சண்டை எழுவது சகஜம். அதுவும், ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் விலங்குகளின் வீடியோக்களையும் பார்க்கலாம், அதேபோல, எதிர்பாராமல், தாக்கி வெற்றி பெறும் விலங்குகளைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | யானையிடம் கேவலமாக பல்பு வாங்கிய சிங்கம்: வீடியோ வைரல்

காண்போரை திகைப்புக்குள்ளாக்கும் ஜாகுவாரின் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீற்றத்துடன் வந்து, தண்ணீருக்கும் பாய்ந்து வெளியே வரும்போது, முதலையை வாயில் கவ்வியபடி வரும் ஜாகுவாரின் நடையில் வெற்றி தெரிகிறது. 

இந்த வேட்டைக்கு சாட்சியாய் நிற்கும் கரடியோ உறைந்துபோய் அசையாமல் நிற்கிறது. மூர்க்கமான இந்த சண்டையை பார்த்து அதிர்ச்சியடைந்தது கரடி மட்டுமா? பார்த்தவர்கள் அதை வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் எப்போது? எங்கு எடுத்தது என்ற விவரம் தெரியவில்லை. இருந்தாலும், காட்டுப்பூனையை தாக்கும் காட்டெருமையின் வீரியமும் ஆச்சரியப்படுத்துகிறது.

மேலும் படிக்க | பயந்த சுபாவமா இருந்தா பாக்காதீங்க: முதலை வாயில் கை.. தப்பித்ததா? துண்டானதா?

மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனையை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News