தகிக்க வைக்கும் நெருப்பாற்றின் வைரல் வீடியோ

இத்தாலியில் எரிமலை வெடித்து ஆறாக ஓடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 2, 2022, 04:58 PM IST
  • இத்தாலியில் வெடித்துச் சிதறிய எரிமலை
  • ஆறாக ஓடிக்கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பு
  • இணையத்தில் பரவும் வைரல் வீடியோ
தகிக்க வைக்கும் நெருப்பாற்றின் வைரல் வீடியோ  title=

உலகில் எரிமலைகள் நிறைத்திருக்கும் நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு கோடைகாலங்களில் மிகவும் பழமையான ஏரிமலைகள் வெடித்துச் சிதறுவது வழக்கம். அந்த நேரத்தில் எரிமலை இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுவார்கள். அண்மையில் சிசிலியின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள எட்னா மலையில் உள்ள எரிமலை திடீரென வெடிப்புக்குள்ளானது. இதனையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | தில்லாலங்கடி கில்லாடி, திருதிருவென விழித்த போலீஸ்: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது

இந்த விஷயத்தை அறிந்த ஒரு புகைப்படக் குழுவினர் எட்னா மலைக்கு புறப்பட்டனர். வெடித்துச் சிதறும் எரிமலைக் குழம்பை அழகாக படம் பிடித்த அவர்கள், ஆறாக ஓடும் நெருப்புக் குழம்பு காட்சிகளையும் உயர்தர கேமராக்களில் படம் பிடித்தனர். எரிமலையின் தீக்குழம்பின் லாவா சாம்பல் கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. அனலைக் கக்கிக் கொண்டு அவை சில கிலோ மீட்டர் தொலைவுகள் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனுடைய சீற்றம் எப்போது அடங்கும் எனத் தெரியவில்லை. தொடர்ந்து எரிமலைக் குழம்புகள் வெளியேறிக் கொண்டே இருப்பதால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதியை முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர். இத்தாலி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் பேசும்போது, எட்னா மலையில் இருந்து எரிமலை வெடித்துச் சிதறுவது வழக்கமான ஒன்று தான் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வழக்கத்துக்கும் மாறாக அதிகமான தீக்குழம்புகள் வெளியேறுவதாக தெரிவித்த அவர், அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை என விளக்கமளித்துள்ளார். 

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News