கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் 4' போட்டியில் சோம் சேகரும் ஒருவர். அவரது அழகிய தோற்றத்தைத் தவிர்த்து தனது நியாயமான ஆட்டத்தால் பார்வையாளர்களை அவர் வென்றுள்ளார்.
இந்த பிக் பாஸ் 4 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியில் அவர் 12 வாரங்களை வெற்றிகரமாக கடந்து உள்ளார். அந்தவகையில் அவர் கடந்து வந்த பாதையை பற்றி பிக் பாஸ் வீட்டில் அவர் பேசும்போது அவர் 10 வருடத்திற்கு முன் தொடங்கி தற்போது வரை கஷ்டப்படுவது, காதல் தோல்வியால் மனஅழுத்தத்திற்கு சென்றது மற்றும் அவரது செல்ல நாய் குட்டு பற்றி எல்லாம் அவர் பேசி இருந்தார்.
ALSO READ | பிக் பாஸ் வீட்டில் செல்போனை பயன்படுத்தினாரா சோம்? சிக்கிய வீடியோ
அதே நேரத்தில் உங்களுக்கு நெருக்கமானவருக்கு கடிதம் எழுதி தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என கூறியபோது அவர் தன் நாய்க்கு தான் எழுதினார். எப்போதுமே தன் செல்ல நாய் பற்றி பிக் பாஸ் வீட்டில் சோம் (Som Shekar) பேசி உள்ளார்.
இந்நிலையில் தற்போது ஒரு அதிரசியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சோமின் செல்ல நாய் குட்டுவின் மகன் ரோனி என்ற நாய் உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டது. இந்த செய்தியை சோம் சேகரின் குடும்பத்தினரும் உறுதி செய்திருக்கின்றனர்.
இந்த செய்து தொடர்பாக க் பாஸ் வீட்டில் இருக்கும் சோம் சேகரிடம் ரோனி மரணம் பற்றி இப்போதே சொல்லப்படுமா அல்லது வெளியில் வந்த பிறகு சொல்லப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ALSO READ | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ஷெட்டி வெளியிட்ட முதல் வீடியோ!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR