பார்கிங் ஏரியாவில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: முத்தமா, யுத்தமா? குழம்பும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Snake Love Video: இரு பாம்புகள் கட்டித்தழுவும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. ஆனால், இதற்கு காரணம் என்ன? வீடியோவை பார்த்தால் புரியும்!! 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2023, 07:09 PM IST
  • பின்னிப்பிணைந்து காதல் செய்யும் பாம்புகள்.
  • கேமராவில் கைதான அன்பும் பாசமும்.
  • வைரலான வீடியோ!!
பார்கிங் ஏரியாவில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: முத்தமா, யுத்தமா? குழம்பும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில், நடன ரீல்கள், வேடிக்கையான வீடியோக்கள், செல்லப்பிராணிகளின் வீடியோக்கள் என இந்த வகை வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இவற்றுடன் இணையவாசிகளுக்கு இடையில் அதிக மவுசு கொண்ட வீடியோக்களில் பாம்புகளின் வீடியோக்களும் அடங்கும். பாம்புகளை பார்த்து அச்சப்படும் அனைவரும் வீடியோக்கள் மூலம் இவற்றை அருகில் காண ஆசைப்படுகிறார்கள். தற்போதும் பாம்புகளின் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. 

வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவில், இரு பாம்புகள் பின்னிப்பிணைந்து, நெளிந்து சுழன்று நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

வீடியோவில், இரண்டு பாம்புகள் சுழன்று, ஒன்றையொன்று சுற்றிக் கொண்டு நிற்பதைக் காண முடிகின்றது. இது பொதுவாக அவ்வளவு எளிதாக காணப்படும் காட்சி அல்ல. பாம்புகளின் இந்த நிலையை பார்த்து சிலர் இவை நடனமாடுவதாக கூறுகிறார்கள். சிலரோ காதலில் இவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன என்றும், இவை இனச்சேர்க்கையின் போது இந்த நிலையில் காணப்படும் என்றும் கூறுகிறார்கள். ஆனால், வேறு சிலரோ, இது நடனமும் அல்ல, காதலும் அல்ல, இந்த பாம்புகள் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள். 

மேலும் படிக்க  | 'இதுக்கு கண்டிப்பா கல்யாணம் ஆயிடுச்சு': குரங்கு செய்த வேலை, வைரல் வீடியோ 

எது எப்படியோ, இந்த வீடியோ பார்ப்பதற்கு மிக சுவாரசியமாக உள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. 

பின்னிப்பிணைந்த பாம்புகளின் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோவை gunjankapoor123 என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.  “இதை என் சொசைடியில் பார்த்தேன்' என இதற்கு அவர் தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | பயிற்சியாளரின் கழுத்தை கடித்த புலி..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News