வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா தாலுக்காவில் உள்ள ஹோச கொப்பல் கிராமத்தில் வீட்டின் வளாகத்தில் தூங்கிக்கொண்டிருந்த நாயை சிறுத்தை தூக்கி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசன் மாவட்டம் ஹோலே நரசிபுரா அருகே உள்ள ஹோச கொப்பல் கிராமத்தை சேர்ந்தவர் தேவேகவுடா. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் நேற்று இரவு வீட்டு வளாகத்தில் தூங்கிக் கொண்டிருக்கும்போது கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று வீட்டு வளாகத்துக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை உறங்கிக் கொண்டிருந்த நாயை தூக்கி சென்றது.
சிறுத்தை நாயை தூக்கி சென்ற காட்சிகள் தேவேகவுடா வீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளன.
மேலும் படிக்க | ஆட்டுக்குட்டிக்கும் தாய்ப்பால் கொடுக்கும் கோமாதாவின் பசு அன்பு
சிறுத்தை நாயை தூக்கிச்செல்லும் அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்:
கடந்த சில நாட்களாக கொப்பல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் வனத்துறையிடம் தெரிவித்தனர். இந்த சிறுத்தை அந்த பகுதியில் செம்மறி ஆடுகள் மற்றும் தெரு நாய்களை தூக்கிச்சென்று கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி வனத்துறையிடம் தெரிவித்தாலும் வனத்துறை கண்டுகொள்ளாததால் சிறுத்தை கிராமங்களுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR