திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவிரி மருத்துவமனை நாள் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், கருணாதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய சென்னை காவேரி மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். இவர்களை தொடர்ந்து, ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ காவிரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி கனிமொழியுடன் விவரம் கேட்டறிந்தார்.
The doyen of South Indian politics, a man of great intellect and political wisdom. Straddled across the political scene for six decades. Glad to see he has stabilized. Our salutations. -Sg #Karunanidhi @kalaignar89 @mkstalin @KanimozhiDMK @arivalayam pic.twitter.com/d9sbNM9NOs
— Sadhguru (@SadhguruJV) July 30, 2018
#Karunanidhi @kalaignar89 pic.twitter.com/n4WAe3OeOX
— Sadhguru (@SadhguruJV) July 30, 2018