மா குல்பி செய்யும் சச்சின்; இணையத்தில் வைரலாகும் வீடியோ...

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25-வது திருமண ஆண்டு விழாவை மனைவி அஞ்சலியுடன் திங்கள்கிழமை கொண்டாடினார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தின் போது மாஸ்டர் பிளாஸ்டர் தனது முழு குடும்பத்திற்கும் மா குல்பியை உருவாக்கி கொடுத்துள்ளார்.

Last Updated : May 25, 2020, 10:28 PM IST
மா குல்பி செய்யும் சச்சின்; இணையத்தில் வைரலாகும் வீடியோ... title=

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது 25-வது திருமண ஆண்டு விழாவை மனைவி அஞ்சலியுடன் திங்கள்கிழமை கொண்டாடினார். இந்த சிறப்பு சந்தர்ப்பத்தின் போது மாஸ்டர் பிளாஸ்டர் தனது முழு குடும்பத்திற்கும் மா குல்பியை உருவாக்கி கொடுத்துள்ளார்.

"எங்கள் திருமண ஆண்டுவிழாவிற்கு ஆச்சரியம் அளிக்க விரும்பினேன். இந்த மாம்பழ குல்பியை எங்கள் 25 வது திருமண ஆண்டு விழாவில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அளிக்க விரும்பினேன்., இது ஆச்சரியமான ஒன்றாக எனது குடும்பத்தினருக்கு மாறியுள்ளது" என்று டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டில் தான் எவ்வாறு மாம்பழம் குல்பியை உருவாக்கினார் என்பதை வீடியோ வாயிலாக தெரியப்படுத்துகிறார். சச்சினின் தாயும் வீடியோவில் இடம்பெற்று அவருக்கு குல்பி எவ்வாறு செய்யவேண்டும் என உதவி செய்கிறார். இறுதியில், சச்சின் சுவைமிக்க குல்பியை தயார்செய்கிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Made this Mango Kulfi as a surprise for everyone at home on our 25th wedding anniversary.  

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

இந்த ஜோடி 1990-ஆம் ஆண்டில் முதன்முறையாக ஒருவரை ஒருவர் சந்தித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 1995 மே 24 அன்று திருமணம் செய்து கொண்டது. இந்த காதல் ஜோடிக்கு ஒரு மகள் (சாரா) மற்றும் ஒரு மகன் (அர்ஜுன்) உள்ளனர், சச்சினின் மகன் அர்ஜூன் இளைஞனாக கிரிக்கெட்டில் திறன்கள் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறார்.

சமீபத்தில், டெண்டுல்கர் அர்ஜுனுக்கு ஒரு புதிய ஹேர்கட் பெற உதவியதுடன், இந்தச் செயல்பாட்டின் போது அவர்களுக்கு உதவிய மகள் சாராவிற்கும் நன்றி தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு சமீபத்தில் வைரலாக பகிரப்பட்ட நிலையில் தற்போது தனது மாம்பழ குல்பி வீடியோவினையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Trending News