Viral Video: உள்ளூர் ரயிலில் 'புஷ்பா’ திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்! கடுப்பில் பயணிகள்...

பிரபலமான புஷ்பா திரைப்படப் பாணியில் குறும்பு செய்யும் இளைஞரின் வீடியோ வைரல்... இது மும்பை உள்ளூர் ரயிலின் வீடியோ 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2022, 01:00 PM IST
  • ரயிலில் 'புஷ்பா’ திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்!
  • வைரலாகும் வீடியோ
  • அல்லு அர்ஜுனை காப்பியடிக்கும் வீடியோ
Viral Video: உள்ளூர் ரயிலில் 'புஷ்பா’ திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்! கடுப்பில் பயணிகள்... title=

Mumbai Local Train Video: புஷ்பா திரைப்பட்ட பாணியில் மும்பை உள்ளூர் ரயிலில் ஒரு இளைஞர் நடந்துக் கொண்டது பயணிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தி வைரலாகிறது.  

சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி (Viral Video) வருகின்றன, அவற்றில் மும்பை உள்ளூர் ரயிலின் வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது, அது பிரபலமான புஷ்பா திரைப்படப் பாணியில் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வந்த அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பாடல்கள் முதல் வசனங்கள் வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 'சாமி', 'ஸ்ரீவல்லி', 'ஓ ஆண்டவா' போன்ற பாடல்கள் மக்களைக் கவருகின்றன.

இந்த பாடல்களும் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரபலங்கள் முதல் செல்வாக்கு செலுத்துபவர்கள் வரை, அனைவரும் தங்கள் ரீல்களில், புஷ்பா திரைப்படத்தின் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். 

ALSO READ | நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்!

இப்போது ஒரு சிறுவன் அல்லு அர்ஜுனின் 'ஸ்ரீவல்லி' ஹூக் ஸ்டெப்பைப் பயன்படுத்தி, மும்பை லோக்கல் ரயிலில் மக்கள் எப்படி நுழைய முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டியுள்ளார். அந்த வீடியோவை பார்த்ததும் பலரது ரியாக்ஷன்கள் வந்தன.

அல்லு அர்ஜுனை காப்பி அடிக்கும் நபர் 
வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் 'ஸ்ரீவல்லி' ஹூக் ஸ்டெப்பைப் பயன்படுத்தி, மும்பைவாசிகள் எப்படி மும்பை உள்ளூர்வாசிக்குள் நுழைகிறார்கள் என்பதைக் காட்டுகிறார். இந்த வேடிக்கையான வீடியோ (Viral Video) மக்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க மட்டுமே என்பதை நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhiraj sanap (@dhirajjjjj_)

மும்பையின் உள்ளூர் ரயிலுக்கு செல்வதற்கு வரும் பயணி, லிப்ட், பிளாட்பாரம், கேட் என எல்லா இடங்களிலும் முந்திச் செல்வதைக் காணலாம். அதுமட்டுமல்ல, இத்துடன் பிரபலமான புஷ்பா திரைப்படத்தின் ஸ்ரீவள்ளி பாடலும் இந்த வீடியோவில் பின்னணியில் ஒலிகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால், சக பயணியாக அவருடன் நிற்கும் அவரது நண்பர் விதவிதமான முகபாவனைகளைக் கொடுப்பதுதான்.

ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்  டான்ஸ் ஸ்டெப் 
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் (Viral Video) அல்லு அர்ஜுனை காப்பி அடிக்கும் பாணியில் பயணிகளை இளைஞன் எப்படி டென்சனாக்குகிறார் என்பதையும் பார்க்கலாம். 

இந்த வீடியோவை பார்த்து அருகில் உள்ளவர்களும் வினோதமான எதிர்வினைகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் தீரஜ் சனாப் என்பவர் பதிவேற்றியுள்ளார் இதுவரை 2 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதாவது ஞாயிற்றுக்கிழமை தான் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

இந்த வீடியோவை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 

ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News